பைப் மீது ஏறிச் சென்ற கணவன் கீழே விழுந்து பலி.. காலிங் பெல் வேலை செய்யாததால் விபரீதம்!!

 
தென்னரசு

விதி.. முடிவு செய்து விட்டால், ஒருத்தரின் உயிரை எப்படியெல்லாம் காவு வாங்கும் பார்த்தியா என்று பரிதாபப்பட்டு அரற்றிக் கொண்டிருக்கிறார்கள் திருப்பத்தூர் மக்கள். மலையில் இருந்து உயிரை விட துணிந்து குதித்தவன் பொழைச்சதும் உண்டு. ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, சிறு கல் இடறி கீழே விழுந்து உயிரை விட்டவனும் உண்டு என்று பழமொழி சொல்லி சோகத்தை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள் திண்ணைப் பெரியவர்கள். வீடு திரும்பிய கணவன், வீட்டு வாசலில் காலிங்பெல்லைத் தொடர்ந்து அடித்தும் மனைவி கதவைத் திறக்கவில்லை. காலிங் பெல் வேலைச் செய்யாதது கணவனுக்குத் தெரியவில்லை.

தொடர்ந்து மனைவியின் செல்போனுக்கு அழைத்தும் பதில் இல்லாததால், பதற்றத்தில், வீட்டின் பைப் மீது ஏறி மேலே சென்ற போது, தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தைத் தான் இப்பை  சோகத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி பகுதியில் வசித்து வந்தவர் தென்னரசு (30). விற்பனைப் பிரதிநிதியாக வேலைப் பார்த்து வரும் தென்னரசு, நேற்று முன் தினம் இரவு வேலை முடிந்து தாமதமாக வீட்டிற்கு வந்த நேரத்தில் அவரது மனைவி வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து தென்னரசு வீட்டின் காலிங்பெல்லை அழுத்தினார். பலமுறை அழுத்தி சத்தம் கேட்டும் அவரது மனைவி கண் விழிக்கவில்லை. காலிங்பெல் வேலைச் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

dead-body

இதனை தொடர்ந்து அவரது மனைவிக்கு போன் செய்தார். அப்போதும் அவர் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தென்னரசு 2வது மாடியில் உள்ள அவரது வீட்டிற்கு சுவர் வழியாக ஏற முயன்றார். அப்போது தவறி வீட்டுக்கு பின்புறம் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே நள்ளிரவில் கண் விழித்த அவரது மனைவி, வழக்கமான நேரத்தைக் கடந்தும் கணவர் இன்னும் வீடு திரும்பவில்லை என்று சந்தேகம் அடைந்தார். இது குறித்து அவரது உறவினர் ஒருவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவரது உறவினர் உடனடியாக தென்னரசுவின் வீட்டிற்கு விரைந்து வந்துள்ளார். பின்னர், தென்னரசுக்கு போன் செய்தார். அப்போது வீட்டின் பின்புறம் இருந்து தென்னரசுவின் செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது.

Natrampalli PS

இதனால் அவர்கள் அங்கே சென்று பார்த்தனர். அப்போது தென்னரசு விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தென்னரசு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். நாட்டறம்பள்ளி போலீசார் தென்னரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web