சச்சினை மிஞ்சிய மகன் அர்ஜுன்! பேட்டிங், பெளலிங் என ஆல்ரவுண்டராய் அசத்தல் சாதனை!

 
சச்சின் அர்ஜுன்

இந்தியாவின் கிரிக்கெட் அணியில் ஜாம்பவானாக விளங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படாமலேயே இருந்து வருகிறது. இவருடைய மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் மீது ஆர்வம் காட்டி வருகிறார்.  இவருக்கு வயது 23. அர்ஜுன் டெண்டுல்கர் இடது கை பேட்ஸ்மேன். இவர் மும்பை அணிக்காக  உள்ளூர் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடி வந்தார்.

அர்ஜுன் மும்பை ரஞ்சி அணியில் இருந்தாலும், அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது. தற்போது ரஞ்சி தொடரில் கோவா அணிக்காக அர்ஜூன் விளையாடினார். ராஜஸ்தானுக்கு எதிராக களம் இறங்கிய அர்ஜுன் சதம் விளாசி அசத்தினார். 7வதாக  பேட்டிங் செய்ய வந்த அர்ஜூன் 207 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். 

அர்ஜுன்
1988-ல் சச்சின் தனது முதல் அறிமுக ரஞ்சி போட்டியில் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் 2022ல் அவரது மகன் அர்ஜுனும் அறிமுகமாகும் முதல் ரஞ்சி போட்டியில் சதம் விளாசியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து சச்சின் விடுத்த செய்திக்குறிப்பில் அர்ஜூன் மீது அழுத்தத்தை பதிவு செய்யாதீர்கள். அவர் இயல்பாக விளையாடட்டும். அப்போது தான் அவர் தன்னுடைய முழு திறமையையும் கிரிக்கெட்டில் செலுத்த முடியும் எனத் தெரிவித்திருந்தார். 

அர்ஜுன்
அர்ஜுன்  பேட்டிங்க்கில் மட்டுமல்ல பந்து வீச்சிலும் அசத்தியுள்ளார். அறிமுக போட்டியிலேயே சதமடித்தது மட்டுமின்றி  23.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். தந்தையை மிஞ்சிய மகன் என நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ஒரே ஒரு போட்டியை மட்டுமே பார்த்து விட்டு, அதை கணக்கில்வைத்து சச்சினின் அனைத்து சாதனைகளையும் ஒப்பிட்டு விட முடியாது. அதே நேரத்தில்  அர்ஜூன் இதே வேகத்தில் விளையாடினால்  இந்திய அணிக்கு அடுத்த  ஆல்ரவுண்டர் ரெடி என்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள். ரஞ்சி  போட்டியில் முதலில் விளையாடிய கோவா அணி முதல் இன்னிங்சில் 547 ரன்கள் எடுத்திருந்தது. 2வதாக களம் இறங்கிய ராஜஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 456 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இதில் மோஹித் 5 விக்கெட்டுகளையும், .அர்ஜுன் டெண்டுல்கர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web