அடுத்த அட்ராசிட்டி.. கார் கூரையின் மீது அமர்ந்து காதலர்கள் அட்டூழியம்.. வைரலாகும் வீடியோ!

 
காதலர்கள்

அச்சச்சோ... என்று வருகின்ற தலைமுறையை அதிர்ச்சியோடு பார்க்கிறது உலகம். ஆமாம்... உலகம் பூராவுமே இந்த பயம் இருக்க தான் செய்கிறது. பயமே இல்லாத ஒரு தலைமுறை.. சுயநலத்தோடு யோசிக்கிற தலைமுறை.. அல்லது யோசிக்கவே.. அடுத்தவர்களைப் பற்றி யோசிக்கவே யோசிக்காத தலைமுறை உருவாகி வருகிறது. மெஜாரட்டி அப்படி இல்லையென்றாலும், இருக்கிற அள்ளு, சில்லுகள் ஒரு துளி விஷம் போல எத்தனைப் பேரின் எதிர்காலத்தைப் பாழாக்க போகிறதோ என்கிற அச்சம் பிறக்கிறது.

நடுரோட்டில், இரு சக்கர வாகனத்தில் முன்னால் அமர்ந்தபடி, காதலித்து கொண்டே வண்டி ஓட்டி சென்ற வீடியோ உத்தரபிரதேசத்தில் வைரலான நிலையில், அடுத்த அட்ராசிட்டியாக லக்னோவில் காதல் ஜோடி ஒன்று கார் மீது அமர்ந்தபடி காதல் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.


காதல் ஜோடி ஒன்று ஸ்கூட்டரில் பயணித்தப் படியே காதல் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், போலீசார் அந்த காதலர்களை எச்சரித்து வழக்கும் பதிவு செய்திருந்தனர். இப்போது, ​​லக்னோவில் இருந்து மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் காதலர்கள் தங்கள் காதலை காரின் உச்சிக்கு எடுத்துச் செல்வதைக் காணலாம்.

வைரலாகும் அந்த வீடியோவில், ஹூண்டாய் வெர்னா போன்று நகரும் செடானில் காதலர்கள், சன்ரூப்பில் இருந்து வெளியே வந்து, வாகனம் ஓடிக் கொண்டிருக்கும் போதே ஒருவரை ஒருவர் கட்டிப் பிடிப்பதைக் காணலாம்.

Luknow

இந்த வீடியோவை ஷேர் செய்து வரும் இணையவாசிகள், இந்த காதல் ஜோடிகளை போலீசார் ஏன் இன்னும் தண்டிக்கவில்லை... சாலை பாதுகாப்பு விதிமுறைகள் ஏன் இப்படி காற்றில் பறக்கிறது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இன்னும் சிலரோ.. இது  மிக தவறான முன் உதாரணம்.. இந்த வீடியோவைப் பார்க்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நாளை இதன் அடுத்த கட்ட சாகசங்களை முயற்சி செய்வார்கள். தண்டனை கடுமையானதாக இருந்தால், இது போன்ற தவறுகள் மீண்டும் நிகழாது. இந்த சாகசங்களைத் தவிர்க்கவே கல்லூரிகளில் பஸ் டே  கொண்டாடப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web