அடுத்த அதிர்ச்சி! வேறொருவனைத் திருமணம் செய்த காதலி! 6 துண்டுகளாக வெட்டிக் கொன்ற காதலன்!

 
ஆராதனா

சமீபமாக நாடு முழுவதுமே பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொலைச் செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர செய்த நிலையில், மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. தன்னைக் காதலித்து விட்டு, வேறொருவனைத் திருமணம் செய்த காதலி, அதன் பின்னர் காதலனுடனும் தொடர்ந்து உறவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், தன்னை திருமணம் செய்யாதது குறித்து மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ள காதலன், முன்னாள் காதலியை கரும்பு தோட்டத்திற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்து விட்டு,  கொலைச் செய்து விட்டு 6 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு பகுதிகளில் வீசி எறிந்தது தெரிய வந்துள்ளது. 

உத்தர பிரதேசம் மாநிலம், அசம்கர் மாவட்டத்தில் உள்ள இஷாக் பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பிரன்ஸ். இவர்  ஆராதனா என்ற பெண்ணை காதலித்தார். ஆனால் பெற்றோர்கள் வேறொரு பணக்கார  மாப்பிள்ளையை வரனாக பார்த்து ஆராதனாவுக்கு நிச்சயம் செய்தவுடன், பிரின்ஸைத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். அதே சமயம், திருமணமானாலும் தொடர்ந்து பிரின்ஸுடன் உறவில் இருப்பதாகவும் கூறியுள்ளார். 

ரூ. 35,000 பணத்துக்காக சொந்த தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன்..!!

தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆராதனா மீது பிரன்ஸ் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார். அவரை சமாதானப்படுத்தும் வகையில்  வேறொருவருடன் திருமணம் முடிந்தாலும், ஆராதனா தொடர்ந்து முன்னாள் காதலன் பிரின்ஸைத் தனிமையில் சந்தித்து, உறவில் இருந்து வந்துள்ளார். ஆனால் தனக்கு துரோகம் செய்து வேறொருவனைத் திருமணம் செய்து கொண்ட ஆராதனா, அவனுக்கும் துரோகம் செய்து தன்னுடனும் உறவில் இருப்பது பிரின்ஸ் மனதில் ஆராதனா மீது அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

ஆராதனாவின் இந்த செயல் குறித்து தனது உறவினர் சர்வேஷூடம் சொன்ன பிரின்ஸ், காதல் பெயரில் இப்படி ஆண்களை ஏமாற்றுவது பல பெண்களுக்கு வழக்கமாக இருக்கிறது என்று அடிக்கடி சொல்லி வந்துள்ளார். இந்நிலையில், உறவினர் சர்வேஷ் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் ஆராதனாவை கொல்ல திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.

ஆராதனாவை பிரின்ஸ் தனது பைக்கில் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். ஏற்கெனவே அங்கே தயாராக இருந்த சர்வேஷின் உதவியுடன் ஆராதனாவை  கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்று அங்கு  கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

இருவரும் இணைந்து  அவரது உடலை 6 பகுதிகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் அடைத்தனர். அருகில் இருந்த கிணற்றில்  சில பாகங்களையும் தூரத்தில் உள்ள குளத்தில் அவரது தலையையும் வீசி சென்றுள்ளனர். இந்நிலையில், தோட்டத்தின் அருகே இருந்து கிணற்றில் சில உடல் உறுப்புக்கள் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.  இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பிரின்ஸ் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கூரிய முனைகள் கொண்ட ஆயுதம், நாட்டு கைத்துப்பாக்கி, தோட்டா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போலீஸ்
வெட்டப்பட்ட உடல் பாகங்களை எடுப்பதற்காக பிரின்ஸை சம்பவ இடத்திற்கு  காவல்துறையினர் அழைத்து சென்றனர். அப்போது, மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை கொண்டு காவல்துறையை நோக்கி பிரின்ஸ் சுடத் தொடங்கினார். போலீசாரும் திரும்பி சுட்டதில் பிரின்ஸ் படுகாயம் அடைந்தார். அவருடன் இந்த கொலை சம்பவத்தில் உதவியாக இருந்த  சர்வேஷ், பிரமிளா யாதவ், சுமன், ராஜாராம், கலாவதி, மஞ்சு, ஷீலா என அனைவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் தனிப்படை அமைத்து தேடப்பட்டு வருகின்றனர்.  டெல்லி சம்பவத்தை தொடர்ந்து இதே போன்ற சம்பவங்கள் தொடர்வது மக்கள் மனதில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web