மதபோதகரின் வக்கிர புத்தி! இளம்பெண் வர்ணிகா.. கலெக்டரிடம் கண்ணீர் புகார்!

 
சாமுவேல்

எனக்கும் அவருக்கும் பத்து வருஷ காதல்.. நெருக்கம். அவருடைய மனைவியாகவே அவ்வளவு நெருக்கமா இத்தனை வருஷமா வாழ்ந்து வந்திருக்கேன். இப்போ, அந்தரங்க புகைப்படங்களை வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டுகிறார் என்று மதபோதகர் மீது மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியைச் சேர்ந்த வர்ணிகா திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த புகாரில், திருமணம் செய்து கொள்வதாக பத்தாண்டுகளுக்கு மேலாக என்னுடன் நெருக்கமாக பழகி, அவருடன் மனைவி போல் வாழ்ந்து வந்த தன்னை மத போதகர் ஒருவர் ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். 

மதுரையை சேர்ந்த நான் நெல்லை மாவட்டம் டக்கரம்மாள்புரம் பகுதியில் வசித்து வருவதாகவும், தன்னுடன் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த மத போதகர் சாமுவேல் என்பவர் 10 ஆண்டுகளாக நட்பாக பழகி திருமணம் செய்து கொள்வதாய் கூறி மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் எனக்கு தெரியாமல் மத போதகர் சாமுவேல், சென்னையை சேர்ந்த பிளசி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

girl

என்னை திருமணம் செய்வதாக கூறி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தது குறித்து கேட்டதற்கு தனக்கு திருமணமே ஆகவில்லை என்று ஏமாற்றி கொண்டிருக்கிறார். மேலும் நான் தொலைபேசியில் அவரிடம் பேசினால் தகாத வார்த்தைகளைப் பேசி என்னை திட்டுகிறார். என்னை பலமுறை அவர் செல்போனில் ஆபாசமாக படம் பிடித்து வைத்திருக்கிறார். ஏதாவது பேசினால் அந்தப் படங்களை வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி என்னை மிரட்டுகிறார். மேலும் எனக்கு பலமுறை பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். அவர் விருப்பத்திற்கு இணங்க மறுத்தால் என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார்.

girl

எனக்கு குடும்ப கஷ்டம் என கூறி ரூ.2 லட்சம் வரை என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு திருப்பி தர மறுத்து வருகிறார். பணத்தை திருப்பி கேட்டால் அவரது மாமா முத்து ஜேம்ஸ் என்பவரை வைத்து கொலை மிரட்டல் பிடித்து வருகிறார். மேலும் இது போன்ற பல்வேறு சம்பவங்களின் காரணமாக மனமடைந்து தற்கொலை முயற்சி செய்த போது என்னை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றினார்கள். எனவே அவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்க அப்பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.  மத போதகர் சாமுவேல் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தனியாக யூ-ட்யூப் சேனல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web