ஞானபீடவிருது பெற்ற கவிஞர் காலமானார்!! முதல்வர் இரங்கல்!!

 
நீல்மணி பூகன்

 ஞானபீட விருது பெற்ற மூத்த  அஸ்ஸாம் கவிஞர் நில்மணி பூகன்  வயது மூப்பு காரணமாக காலமானார். இவருக்கு வயது 90. இவருக்கு  மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் ஜனவரி 18 ம் தேதி புதன்கிழமை கௌகாத்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜனவரி 19ம் தேதி வியாழக்கிழமை காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளன. பூகன் ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய மொழிகளின் சிறந்த கவிதைகளை அஸ்ஸாம் மொழியில் மொழிபெயர்த்தவர். 

நீல்மணி பூகன்


அஸ்ஸாமின்  இலக்கியத்தை வளப்படுத்தியவர்களில் பெரும்பங்கு வகித்தவர். அவரது பங்களிப்பு எப்போதும் நினைவு கூரப்படும்    அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்கள் எனவும் தெரிவித்துள்ளார்.பூகனின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அஸ்ஸாம்  முதல்வர் அறிவித்துள்ளார். இலக்கியத்துறையில் இவரது பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் பூகனுக்கு 2021ல்  ஞானபீட விருது வழங்கப்பட்டது.  அஸ்ஸாமில் ஞானபீட விருதைப் பெற்ற 3வது நபர் பூகன் என்பது பெருமைக்குரிய விஷயம். அத்துடன்  'கோபிதா' கவிதை நூலுக்காக 1981ல் சாகித்ய அகாடமி விருதையும், 1990ல் பத்மஸ்ரீ விருதையும், 2019ல் டி.லிட் விருதையும், 2002ல் சாகித்ய அகாடமி பெல்லோஷிப்பையும் பெற்றவர்.

rip
இலக்கிய ஆர்வம் கொண்ட பூகன்  கல்லூரிப் பேராசிரியரும் கூட.  பல கவிதைத் தொகுப்புகள் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்களால் கொண்டாடப்பட்டன என்றாலும் 'புலி தோகா சூர்யமுகி புலோர் பலே' (பூக்கும் சூரியகாந்திக்கு), 'கோலபி' ஜமூர் லக்னா' (தி ராஸ்பெர்ரி தருணம்), 'கோபிதா' (கவிதைகள்), 'நிருத்யரத பிரிதிவி' (நடன பூமி). ஆகியவை பெரும் வரவேற்பு பெற்றவை. இது தவிர  இயற்கை, கலை மற்றும் இந்திய பாரம்பரிய இசை மீதும் பூகனுக்கு ஆர்வம் அதிகம். பண்டைய மற்றும் நவீன கலை வடிவங்களை அறிந்து அஸ்ஸாம் மக்களுக்கு  இந்திய மற்றும் மேற்கத்திய கலை வடிவங்களின் பல்வேறு நுணுக்கங்களை அறிமுகப்படுத்தினார். இவரது இறப்பிற்கு பிரபலங்கள், வாசகர்கள், நண்பர்கள், உறவினர்கள், தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web