வைரலாகும் வீடியோ!! முதல்வரின் சகோதரியை காருடன் அலேக்காக தூக்கி சென்ற போலீசார்!!

 
ஜெகன்மோகன்ரெட்ட்டி

தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகரராவ். இங்கு  தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதே பகுதியில் ஆந்திர முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி சகோதரி சர்மிளா ரெட்டி  ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற பெயரிலான கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். 


இந்நிலையில், தெலுங்கானா முதல்வர்  சந்திரசேகர் ராவுக்கு எதிராக அவரது இல்லத்தின் முன்பு போராட்டம் நடத்த  சர்மிளா ரெட்டி காரில் புறப்பட்டு சென்றார். இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டதும் காவல்துறையினர் கிரேனுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  

காரில் சர்மிளா அமர்ந்து இருந்தபோதே, கிரேன் கொண்டு  காருடன் அவரை தூக்கி சென்றனர். அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களும் காரின் பின்னாலேயே  ஓடினர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு பெரும் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web