மீண்டும் உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. மார்ச் மாதத்தில் தங்கத்தின் மீது இறக்குமதி வரிவிதிக்கப்பட்ட பிறகே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருந்துவருகிறது. ஒரு நாள் தங்கத்தின் விலை இறங்கினாலும் அடுத்த நாளே இரட்டிப்பாக உயர்ந்து விடுகிறது. இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் மீதான முதலீடு பெரும் சேமிப்பாக இருந்து வருகிறது.

தங்கம்

அமெரிக்கப் பங்குப்பத்திரங்களில் இருந்து கிடைக்கும் ஆதாயம் குறைந்துள்ளதையடுத்து, முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகிறார்கள். அதனால்தான் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வார இறுதி நிலவரப்படி தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உச்சம் தொட்டு ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5000ஐ கடந்தது. அந்த வகையில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி ஒரு  கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,016ஆகவும்  சவரன் ரூ.40,128ஆகவும் இருந்து வந்தது. நேற்றைய விலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,016க்கும்,  சவரனுக்கு ரூ.48 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.40,128க்கு விற்பனை செய்யப்பட்டது. 

தங்கம்

இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,023க்கும், சவரனுக்கு ரூ.56 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.40,184க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கத்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி  வெள்ளியின் விலை, 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71.30 க்கும்,  ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.300 அதிகரித்து ரூ.71,300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web