மீடியனில் மோதி கவிழ்ந்த பள்ளிப்பேருந்து!! 18 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!!

 
கவிழ்ந்த பேருந்து

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் நேற்று மாலை பள்ளி நேரம் முடிந்ததும் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளிப் பேருந்து கிளம்பியது. இந்தப் பேருந்தில்  40 மாணவர்களுடன்  நீலமங்கலத்தில் வசித்து வரும் 58 வயது கணேசன் ஓட்டி சென்றார். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மினி டெம்போ மோதுவது போல் சென்றதால் பேருந்தை திருப்பினார் கணேசன்.

பள்ளி வாகனம்

 இதனால் பள்ளிப்பேருந்து  எதிர்பாராதவிதமாக செண்டர் மீடியன் மீது மோதி கவிழ்ந்தது. பேருந்தில் இருந்த மாணவ, மாணவிகள் கத்தி கூச்சலிட்டனர்.  அதே சாலையில் சென்று கொண்டிருந்த வாகனஓட்டிகள், பொதுமக்கள் திரண்டு வந்து பேருந்தின்  கண்ணாடிகளை உடைத்து மாணவர்களை வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பள்ளி மாணவிகள் மயக்கம்

 தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கலெக்டர் ஷ்ரவன்குமார், எஸ்பி பகலவன் வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த விபத்தில் 18 மாணவ, மாணவிகள்,  பள்ளி ஊழியர் அமுதா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு  அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொக்லைன் இயந்திரம் கொண்டுவரப்பட்டு கீழே விழுந்து கிடந்த பள்ளிப்பேருந்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web