பச்சை நிறமாக மாறிய கடல்!! அச்சத்தில் பொதுமக்கள்!!

 
பச்சை நிறமாக மாறிய கடல்

மிக நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டங்களில் ஒன்று தூத்துக்குடி. இந்த பகுதியில் வசிப்பவர்களின் பிரதானத் தொழிலே மின்பிடித்தல் தான். தூத்துக்குடி கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கடல் பகுதியில் அரிய வகை  உயிரினங்கள் வசித்து வருகின்றன. தூத்துக்குடி கடல் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் காரணமாக பாதிப்புகள்  ஏற்படத் தொடங்கியுள்ளன.

பச்சை நிறமாக மாறிய கடல்

இதனால்  கடல் பகுதியில் பாசிப்படலங்கள் அதிகமாக உருவாவதால்  அப்பகுதியில் உள்ள உயிரினங்கள் பெரும் அழிவை சந்தித்து வருகின்றன.அந்த வகையில் அக்டோபர்  மாதம் தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே கடல் பச்சை நிறமாக காட்சி அளித்தது.  திடீரென பாசிகள் காணாமல் போயின. அதே போல்  நேற்று மீண்டும் புதிய துறைமுகம் கடற்கரை முழுவதுமே பச்சை பசேலென காட்சி அளித்தது. இதனை சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்கள், சுற்றுலாப் பயணிகள் நேரில் வந்து ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.  இது குறித்து கடல்ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி திரவியராஜ் விடுத்த செய்திக்குறிப்பில்  கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் காரணமாக கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி

கடலில் வெப்பம் அதிகரிப்பதால் நுண்ணுயிர் பாசி படலம் பெருகுதல் இவை  ஏற்பட்டு வருகின்றன. 2008ல்  முதன்முறையாக மண்டபம் பகுதியில் இந்த நுண்ணுயிர் பாசிப்படலம் தென்பட்டது. அதன் பிறகு 2019முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்த நுண்ணுயிர் பாசிப்படலம் அதிகரித்து வருகிறது. இந்த பாசிப்படலம் கடலில் வசிக்கும் மீன்களுக்கு பேராபத்து ஏற்கனவே கீழக்கரை பகுதியில் மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளன.

இந்த பாசி அதிக அளவில் ஆக்சிஜனை எடுத்து வேகமாக பல்கி பெருகும். இதனால் கடல் பச்சை நிறமாக காட்சி அளிக்கிறது. கடலில் உள்ள ஆக்சிஜனை எடுத்துவிடுவதால், அந்த பகுதியில் உள்ள பவளப்பாறைகள், மீன்கள் என கடலில் வாழும் மற்ற உயிரினங்களுக்கும் ஆக்சிஜன் கிடைக்காமல் போகும். ஒரு வாரத்துக்கு மேல் பாசிப்படலம் ஒரே இடத்தில் இருந்தால், அந்த பகுதியில் வாழும் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து விடும். ஆனால்  அதிக காற்று,மழை இவைகளால் பாசிகள்  ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அடித்து செல்லப்பட்டு விடும் எனவும் தெரிவித்துள்ளார்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web