14 விமானங்களின் சேவை முற்றிலும் பாதிப்பு!! விமானப் பயணிகள் கடும் அவதி!!

 
விமானம்

தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் மழை குறைந்து பனி அதிகரித்துள்ளது. அதிலும் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் காரணமாக எதிரில் வாகனங்கள் தெரியாத அளவு இந்த பனி பரவி வருகிறது. இன்று வழக்கத்தை விட கூடுதலாகவே பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் சென்னையில் 14 விமானங்களின் சேவைகளில்  பாதிப்பு ஏற்பட்டது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலையிலிருந்தே மிகக் கடுமையான பனிமூட்டம் இருந்தது.  

விமானம் விமான நிலையம்

இன்று காலை 8 மணிக்கு  மும்பையில் இருந்து 129 பயணிகளுடன் சென்னை மீனம்பாக்கம் வந்த மும்பை  விமானம் ஓடுபாதை சரியாக தெரியவில்லை என்பதால்  நீண்ட நேரமாக வானத்தில் வட்டமிட்டுக் கொண்டே இருந்தது. தரையிறங்க வழிதெரியாததால்  அந்த விமானம்  பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. அதேபோல் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த இரண்டு விமானங்கள், பெங்களூரூ, கொல்கத்தா, கோவை, ஐதராபாத்  நகரங்களில் இருந்து வந்த விமானங்களும் வானத்தில் வட்டமடித்து கொண்டே இருந்தன.

விமானம்

 அரை மணி நேரத்திற்கு பிறகு தான்  தாமதமாக தரையிறங்கின. அதே போல் சென்னையில் இருந்து மஸ்கட், லண்டன், கோலாலம்பூர், கொல்கத்தா  நகரங்களுக்கு செல்லும் விமானங்களும் தாமதமாகவே புறப்பட்டு சென்றன. விமானம் பனிமூட்டம் காரணமாக தாமதமானது தெரியாமல் குறித்த நேரத்திற்கு வந்த விமானப் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web