தன்னை தானே குத்திக் கொண்ட மாணவன்!! பெற்றோர் சண்டையால் விபரீத முடிவு!!

 
பாலகிருஷ்ணன்

இன்றைய இளைய தலைமுறையினருக்கு எதையும் சமாளிக்கின்ற தைரியமோ, சவாலை எதிர்கொள்ளும் திறனோ இல்லாமல் மன அழுத்தத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால் பல நேரங்களில் விபரீத முடிவை எடுத்து விடுகின்றனர்.  இத்தகைய செயல்களால் பெற்றோர்களையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தி விடுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்திராகாந்தி தெருவில் வசித்து வருபவர்  பிரபாகரன். இவரது மனைவி கங்கையம்மாள். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார்.

பாலகிருஷ்ணன்

இவர்களது மகன் 19 வயது   பாலகிருஷ்ணன்  தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 15 நாட்களாக பிரபாகரன் வேலைக்கு செல்லவில்லை. இதனை மனைவி கண்டித்ததால் தம்பதியர் இருவருக்கும் வாக்குவாதம், சண்டை, சச்சரவுகள். தொடர்ந்து தகராறு, கைகலப்பு ஏற்பட்டு வந்தது.மகன் பாலகிருஷ்ணனுக்கு இருவரையும் சமாதானப்படுத்துவதே பணியாக இருந்த போதிலும் சண்டை மட்டும் குறையவே இல்லை.  இதனால் மனமுடைந்த பாலகிருஷ்ணன் விபரீத முடிவு எடுத்தான். 


நேற்று இரவும் வழக்கம்போல் தாய், தந்தை இடையே சண்டை.  இதனை கண்ட பாலகிருஷ்ணன் மிகவும் மனவேதனை அடைந்து  இனியும் இருவரும் சண்டை போட்டால்  நான்  கத்தியால் குத்திக்கொண்டு  இறந்து விடுவேன்’ எனக் கூறினார். பெற்றோர் இதனை கண்டுகொள்ளவே இல்லை. ஆவேசம் அடைந்த பாலகிருஷ்ணன் கத்தியால் தனது மார்பில் குத்திக் கொண்டு  ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.  இதனை எதிர்பாராத பெற்றோர் மகனை கண்டு கதறி துடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போலீஸ்

ஆனால் வழியிலேயே பாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.வீண் சண்டையால் மகன் தற்கொலை செய்து கொண்டதை நினைத்து பெற்றோர் கதறி துடித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையுன் ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!