தொடரும் விபரீதங்கள்!! பள்ளியில் தற்கொலை முயற்சி!! மாணவன் பரிதாபப் பலி!! மாணவி கவலைக்கிடம்!!

 
மாணவன் மாணவி

இன்றைய இளைய சமுதாயம் கேட்டது எல்லாம் உடனே கிடைக்க வேண்டும். இல்லையெனில் நான் வாழவே போவதில்லை என விபரீத முடிவை எடுத்து விடுவேன் என பெற்றோர்களை மிரட்டியே  சாதித்து வருகிறது. இது ஆரோக்கியமானதல்ல . விபரீத போக்கு என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். உத்தரபிரதேச மாநிலத்தில்  மகாராஜ் கஞ்ச் பகுதியில் ஒரே கிராமத்தில் வசித்து வந்த 12 வகுப்பு மாணவனும், சிறுமியும் காதலித்துள்ளனர்.

விஷம்

இருவரும் திருமணம் செய்து கொள்ள நினைத்து பெற்றோரிடம் தெரிவித்தனர். சிறுமி மைனர் என்று கூறி எதிர்த்தனர். இதனால் மனமுடைந்த இருவரும் பள்ளி வளாகத்திலேயே  விஷம் குடித்தனர். உடனடியாக இவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துவிட்டான்.மாணவிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலீஸ்

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில்  12-ம் வகுப்பு மாணவனும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் பள்ளி வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதில் மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web