விபத்து குறித்த வீடியோ வெளியானது! நேபாளில் தீப்பிடித்து நொறுங்கிய விமானம்! பலியான சோகம்!

 
நேபாள் விமா

நேபாளத்தில் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் 72 பேருடன் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து பயங்கர விபத்துக்குள்ளானது. பலியானவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படாத நிலையில், இதுவரையில் 29 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 45க்கும் மேற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.10 வெளிநாட்டு பயணிகளும் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த விபத்தில் 16 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர், மேலும் பலர் விமானத்தில் சிக்கி உள்ளனர். இதனால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காட்மாண்டுவில் இருந்து விமானம், பொக்காரா சென்றதாக தெரிகிறது. விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதாக தெரிகிறது. விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, தற்போதைக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.


நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் சீஏஏஎன் (CAAN) படி, எட்டி ஏர்லைன்ஸ் விமானமான 9என்-ஏஎன்சி ஏடிஆர்-72 என்ற விமானம் காத்மாண்டுவில் இருந்து காலை 10.33 மணிக்கு புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காத்மாண்டுவில் இருந்து பொக்காரா விமான நிலையம் சென்ற போது விமானம் விபத்துக்குள்ளாகிய நிலையில், இடிபாடுகளில் எரியும் அதிகமான தீயின் காரணமாக மீட்புப் பணிகள் தடைபட்டுள்ளதாக நேபாள ஊடகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Nepal

எட்டி ஏர்லைன்ஸின் விமானங்கள் விபத்துக்குள்ளாவது இது முதல் முறையானது இல்லை என்றும், கடந்த காலங்களிலும் சில பெரிய விபத்துகளில் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றும் எட்டி ஏர்லைன்ஸ் ஆனது 1998 முதல் செயல்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web