தந்தை, தாய், தங்கை, பாட்டி 4 பேரையும் கொலை செய்த இளைஞன்!!

 
கேசவ்

தலைநகர் டெல்லியில் குற்றவியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காதலியை 36 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு போட்டதன் பரபரப்பு அடங்கும் முன் உத்தரபிரதேசத்தில் இதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக பாலம் பகுதியில் ஒரு இளைஞர்  அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை படுகொலை செய்துள்ளார்.நேற்று இரவு  பாலம் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சென்று பார்த்த போது பெரும் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் இருந்த  3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 4 பேர் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில்  கிடந்தனர்.

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

பொது மக்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். வீட்டின் தரைப்பகுதியில் ஒரு பெண், குளியலறையில் 2 பேர் உட்பட 4 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்ட  விசாரணையில் வீட்டில் இருந்த 25 வயது  கேசவ் ,  தனது தந்தை 50 வயது தினேஷ் ,  தாய் தர்சனா, 75 வயது பாட்டி தேவானா தேவி, 18 வயது தங்கை ஊர்வசி சைனி  அனைவரையும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டான்.  இதில் கேசவ் போதை பொருட்களுக்கு அடிமையானவர் . வேலைக்கு செல்லாமல்  வீட்டில் பணம் வாங்கி போதையிலேயே இருந்து வந்துள்ளார்.

போலீஸ்

பணப்பிரச்சனையில் அவருக்கும், குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அவரை மறுவாழ்வு மையம் ஒன்றில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். சிகிச்சைக்கு முடிந்து   சில நாட்களுக்கு முன்பு தான் கேசவ் வீட்டுக்கு திரும்பினார். இந்நிலையில் நேற்று இரவு கேசவ் தனது குடும்பத்தினருடன் மீண்டு தகராறு செய்துள்ளார். 
அவர்களை கொலை செய்யும் போது  கேசவ்  குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.  இதில் ஆத்திரமடைந்த இளைஞர்  தனது தந்தை உட்பட குடும்பத்தினர் 4 பேரையும் குத்திக்கொலை செய்துள்ளார்.  இதற்கிடையே கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கேசவ்வை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மடக்கிப் பிடித்தனர். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web