அஜித்தின் ‘துணிவு’ பட ஸ்டைலில் கொள்ளையடிக்க வங்கிக்குள் நுழைந்த இளைஞர்! சுற்றி வளைத்த போலீசார்!

 
கலீல்

உலகம் பூராவுமே ‘சதுரங்க வேட்டை’ நடந்து கொண்டு தான் இருக்கிறது. சினிமாவால சீரழிந்தார்கள் என்று பல்லு மேல நாக்கைப் போட்டு பேசுபவர்கள் இருக்கிற இதே ஊரில் தான், சமூகத்துல நடக்கறதைத் தானேய்யா சினிமாவுல காட்டுறான் என்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். பொங்கலுக்கு ரிலீசான நடிகர் அஜித்தின் ‘துணிவு’ பட ஸ்டைலில், வங்கிக்குள் கொள்ளையடிப்பதற்காக பட்டப்பகலில், ஆள் நடமாட்டம் அதிகமிருக்கும் சாலையில் உள்ள திண்டுக்கல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்குள் இளைஞர் ஒருவர் நுழைந்தது அதிர்ச்சியளித்துள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு சாலையில் இயங்கி வருகிறது அந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. எப்போதுமே பரபரப்பாக காணப்படும் அந்த வங்கி கிளையில் காலை நேர பரபரப்புக்கிடையே திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கலீல் ரகுமான் (25) என்பவர் கைகளில் மிளகாய் பொடி, ஸ்பிரே, கட்டிங் பிளேடு உள்ளிட்ட ஆயுதங்களுடன் திடீரென உள்ளே நுழைந்தார். 

Robbery

வங்கியில் நான்கு ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். அவர்கள் மீது கலீல், தான் கொண்டு சென்ற மிளகாய் பொடியைத் தூவி ஸ்பிரே அடித்துள்ளார். பின்னர் தான் எடுத்து சென்ற கயிற்றால் வங்கி ஊழியர்கள் 3 பேரின் கைகளையும் கட்டிப் போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றுள்ளார். நான்கு ஊழியர்களில் ஒருவர், கொள்ளையனின் பிடியில் இருந்து தப்பி, வெளியே ஓடி வந்து பொதுமக்களைப் பார்த்து கொள்ளை, கொள்ளை என கூச்சலிட்டு அழைத்துள்ளார். 

உடனடியாக வங்கிக்குள் அதிரடியாக நுழைந்த பொதுமக்கள் கலீல் ரகுமானை சுற்றி வளைத்து பிடித்துக் கொண்டனர். இதனை அடுத்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கொள்ளையடிக்க முயன்ற கலீல் ரகுமானை திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

arrest

முதற்கட்ட விசாரணையில், தனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டதாகவும் அதனால் தியேட்டரில் அஜித்தின் ‘துணிவு’ படத்தைப் பார்த்து, தானும் அப்படி கொள்ளையடிக்கலாம் என்று வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web