புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் கிடையாது! ஆனா கவனமா இருங்க.. அமைச்சர் அதிரடி!

 
BIG NEWS!! புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை!! கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. ஆனா கவனமா இருங்க. நள்ளிரவு 1 மணிக்கு  மேல தேவையில்லாம வெளியே சுற்றாதீங்க. தற்போது கொரோனா தொற்று அதிகளவில் மீண்டும் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்டங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், தேவையான மருந்துகளை கையிருப்பில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என் று தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு

அதே நேரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பொது இடங்களில் முகக் கவசம், மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடித்தல்  வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக அதாவது 2021 மற்றும் 2022ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும், தடையும் விதிக்கப்பட்டன.  தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10க்கும் கீழ் பதிவாகியுள்ளது. இதனையடுத்து 2023ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடையில்லை என மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார் .

உணவு
சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா  நாடுகளில் ஒமிக்ரானில் இருந்து உருமாறிய பிஎஃப் 7 கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை  'புத்தாண்டு, சமய விழாக்கள், அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகள் என எதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை. அதேநேரம், அனைவரும் சுய கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.  விழாக்களில் தொடர்ந்து மகிழ்ச்சி நிலவ வேண்டும் என விரும்புபவர்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு, முகக்கவசம்,  தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதுவரை இவைகளுக்கு  எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை என்பதையும் பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கொரோனா விதிமுறைகளை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web