இன்னைக்கு லீவெல்லாம் கிடையாது !! ஸ்கூலுக்கு கிளம்புங்க!! அதிரடி உத்தரவு!!

 
மாணவிகள் அரசு பள்ளி

தமிழகத்தில் காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் செயல்படும் என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் இன்று பணிநாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் பள்ளிகளை பொறுத்தவரை  பொதுவிடுமுறை தவிர்த்து விழாக்கள், பண்டிகைகள், உள்ளூர் விசேஷங்களுக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமே. இவை தவிர்த்து திடீர் மழை, இயற்கை பேரிடர் , தவிர்க்க முடியா சம்பவங்களுக்காகவும் விடுமுறை வழங்கப்படும்.

மாணவிகள்

அந்த வகையில் தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் பெய்த பெருமழையின் போது பல மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அடுத்து வரும் சனிக்கிழமைகள் பணிநாளாக கருதப்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்திருந்தனர். அதன்படி   இன்று  ஜனவரி 21ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில்  அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.  

மாணவிகள்

இன்று  நாள் முழுவதும் புதன்கிழமை பாடப்பிரிவை பின்பற்றி பள்ளிகள் செயல்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இப்போது தான் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளி திரும்பிய மாணவர்கள் நாளைக்கும் பள்ளி விடுமுறை கிடையாது என்பதில் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஏற்கனவே பொங்கல் விடுமுறை நீட்டிக்கப்படும் என செய்திகள் வெளியாகி மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web