சுடுகாடு செல்ல பாதையே இல்ல!! சடலத்துடன் உறவினர்கள் போராட்டம்!!

 
கன்னியம்மாள்

திருவண்ணாமலை மாவட்டத்தில்  வந்தவாசி பாதிரி கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு விவசாய நிலங்கள் வழியாகத் தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஊரில் இறப்பு நேர்ந்தால் சடலங்களை அடக்கம் செய்ய ஊர் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.  சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் , 5 பேருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் உள்ளன. பயிரிட்டு விளைச்சல் , நடவு நேரங்களில் விளைநிலத்தில் பிரேதங்களை கொண்டு செல்ல முடியாது. இதனால் அரசு சார்பில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

திருவண்ணாமலை

இது குறித்து ஊர்க்காரர்கள் விவசாய நிலங்களில்  பயிர் வைக்கும்போது அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, நிலங்களை கைப்பற்றி பாதை வசதி ஏற்படுத்தி வேண்டும்  என கிராமத்து சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், நவம்பர் 22ம் தேதி நேற்று அதே கிராமத்தில் வசித்து வரும்  80 வயதான ஆண்டி மனைவி கன்னியம்மாள்  வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.  நேற்று மாலை அவரது சடலத்தை உறவினர்கள் வழக்கம்போல் விவசாய நிலம் வழியாக கொண்டு சென்றனர்.
 விவசாய நிலத்தில் நெல் பயிரிடுவதற்காக ஏர் உழுது கொண்டிருந்தனர். ஆத்திரமடைந்த உறவினர்கள், வழக்கமாக சென்று வரும் பாதையில் ஏர் உழுது வைத்தால் எப்படி சடலத்தை கொண்டு செல்வது என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன்  சடலத்தை கீழே வைத்து விட்டு சுடுகாட்டுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ்


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் , ஊராட்சி மன்ற தலைவர்,  முன்னாள் மாவட்ட கவுன்சிலர் , வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த அவலநிலை குறித்து  வருவாய்த்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, சுடுகாட்டிற்கு பாதை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை கைவிட்டு சடலத்தை உறவினர்கள் எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web