இவங்களுக்கு சொர்க்கவாசல் தரிசனம் கிடையாது!! திருப்பதி தேவஸ்தானம் தடாலடி!!

 
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசி தினத்தில்  சொர்க்க வாசல் திறப்பு. இதற்காக இந்தியா முழுவதும் உள்ள விஷ்ணு ஆலயங்கள் களை கட்டும்.அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசி மிக சிறப்பாகக் கொண்டாடப்படும். நடப்பாண்டில் ஜனவரி 2ம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும். இதன் வழியாக 8 லட்சம் பக்தர்கள் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

அதேநேரத்தில் டோக்கன் இல்லாதவர்களுக்கு அனுமதி கிடையாது என திருப்பதி தேவஸ்தான  தலைமை செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். இது குறித்து விடுத்த செய்திக்குறிப்பில்  வைகுண்ட ஏகாதசியான  ஜனவரி 2ம்தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறந்து 11ம்தேதி நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.  ஏற்கனவே ஆன்லைனில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தலா ரூ.10000 நன்கொடை செலுத்தியவர்கள் சுமார் 2000 பேருக்கு விஐபி டிக்கெட் அளிக்கப்பட்டுள்ளது.  பக்தர்கள் நேரடியாக இலவச டோக்கன்கள் பெரும் விதமாக 9 இடங்களில் திருப்பதியில் 90 கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த டோக்கன்களை  ஜனவரி 1ம்தேதி பிற்பகல் 2 மணி முதல் பெற்றுக் கொள்ளலாம்.

திருப்பதி
அதே நேரத்தில் உலகின்பல நாடுகளில் கொரோனா பரவத் தொடங்கியிருக்கும் நிலையில் பக்தர்கள்  அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பக்தர்கள் டோக்கன்களை பெற முன்கூட்டியே வந்து காத்திருப்பதை தவிர்க்க வேண்டும். ஆன்லைன் டிக்கெட், இலவச டோக்கன்கள் பெற்றவர்கள் மட்டுமே வைகுண்ட ஏகாதசிக்கான சொர்க்கவாசல் நுழைவு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். டோக்கன் இல்லாதவர்களுக்கு தரிசனம் கிடையாது என தெரிவித்துள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web