பொங்கல் தொகுப்பு பெற இது கட்டாயம்!! தமிழக அரசு அதிரடி!!

 
பணம்

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேஷ்டி , சேலையுடன் பரிசுத் தொகுப்பும் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு  அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் ரொக்கப்பரிசு பணம் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை பெறுவதற்கு ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

அசத்தல்!! மக்களே பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற தயாராகிட்டீங்களா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

கடந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பல்வேறு வகையான மளிகை பொருட்கள் மற்றும் முழு கரும்பு உட்பட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதே போல் 2023ல் கொண்டாட இருக்கும்  பொங்கல் பண்டிகைக்கான பொங்கல் பரிசு குறித்து நவம்பர்  19ம் தேதி முதல்வர் ஆலோசனை நடத்தினார். 
இதில் இலவச வேட்டி, சேலையின் நிறம் மற்றும் டிசைன்களை மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.  மளிகை பொருட்களுக்கு பதிலாக  ரொக்க பரிசு ரூ.1000 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அசத்தல்!! மக்களே பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற தயாராகிட்டீங்களா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

இந்த தொகை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக முறைகேடுகள் நடைபெறாமல் உரிய நபருக்கு பணம் சென்று சேரும். அத்துடன் தமிழகம் முழுவதும் 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் 14.60 லட்சம் பேருக்கு  வங்கி கணக்கு கிடையாது. இவர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்குள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web