மூணு ஷிப்ட்.. 68 பேர் பணி! இரவு பகலாக காவிரி பாலத்தில் பேரிங்குகள் மாற்றம்!

 
காவிரி திருச்சி

திருச்சி மாநகரையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் 45ஆண்டு கால பழமையான சிந்தாமணி காவிரி வலுவிழந்தது. இதை ரூபாய் 7 கோடியில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கடந்த செப்டம்பர் மாதம் 10ம்தேதி நள்ளிரவு பாலத்தில் கனரக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. டூ வீலர்கள் செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மறுநாள் 11ம்தேதி காலை முதல் பராமரிப்பு பணிகள் தொடங்கியது. டிசம்பர் 20ம்தேதி நள்ளிரவு முதல் டூ வீலர் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் ஸ்ரீரங்கம் மார்க்கத்தின் அனைத்து வாகனங்களும் சென்னை பைபாஸ் சென்று நகருக்குள் வர வேண்டியது கட்டாயமானது.  இதனால் கூடுதல் அலைச்சல் ஏற்படுவதோடு, அதிகமான எரிபொருள் செலவும் ஏற்பட்டு வருகிறது என பொதுமக்கள் புலம்புகின்றனர்.

காவிரி திருச்சி

இரண்டு மாதங்களாக பணிகள் நடந்து வந்தாலும் தொழில் நுட்ப ரீதியாகவும், பணிகளை விரைந்து முடிக்கவும் அடிக்கடி விஜயம் செய்கிறார் உள்ளூர் அமைச்சரான நேரு அடிக்கடி ஆஜராகி வேலைகளை விரைவுபடுத்தி வருகிறார். தற்போது காவிரி பாலம் பராமரிப்பு பணியில் பாலத்திற்கு அடியில் பேரிங்குகள் மாற்றும் பணி " நடந்து வருகிறது. பெங்களூருவில் இருந்து செய்து கொண்டு வரப்பட்ட 'தொங்கு நடை மேடை' (ஹேங்கிங் பிளாட்பார்ம்) பாலத்திற்கு அடியில் உள்ள குறுகிய இடைவெளியில் அமைத்து, இணைப்பு தூண்களை ஜாக்கி உதவியால் துாக்கி, பேரிங்குகள் மாற்றப்படுகிறது. தூண்களில் மேற்பகுதியில் இணைப்பு ராடுகளும் பொருத்தப்படுகிறது.மொத்தமுள்ள 16 துாண்களில் இதுவரை 5 துாண்களில் மட்டுமே பேரிங்குகள் மாற்றப்பட்டுள்ளது. இவற்றை தூக்குவதற்கு கூடுதல் அழுத்தம் கொடுத்தால் விபத்துக்கள் ஏற்பட வாய்ய்புக்கள் அதிகம், மேலும் ஆற்றில் தண்ணீர் செல்வதால் பாலத்தின் மேற்தளம், துணின் மேற்பகுதி இடையே உள்ள குறுகிய பகுதியில் இருந்து தான் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனால், மிகுந்த எச் சரிக்கையுடன் பணியாற்ற வேண்டியுள்ளது.

காவேரி பாலம்

இரவு, பகலாக 68 நபர்கள் 3 ஷிப்ட்டுகள் பணியாற்றி வருகின்றனர். பாலத்தின் அடியில் பணி நடப்பதால் மேலே இருந்து பார்ப்பவர்களுக்கு பணிகள் நடை பெறாதது போல் இருக்கும் பேரிங்குகள் பொருத்தப்பட்ட பிறகு இணைப்பு இரும்புகளும் பொருத்தப்படுகிறது. இப்பணிக்கு பிறகு மேற்தளம் அமைக்கப்படும். பொங்கலுக்குள் பணிகளை முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில். பணிகளை குறித்த காலத்திற்குள் முடித்து பாலத்தை மீண்டும் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது செவி சாய்குமா அரசு?!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web