தியாகராஜர் ஆராதனை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை! கலெக்டர் உத்தரவு!

 
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி இன்று தஞ்சாவூரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் பிறிதொரு நாள் வேலை நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இன்று தியாகராஜரின் ஆராதனை விழா நடைப்பெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஒவ்வொரு வருடமும் தியாகராஜர் ஆராதனை விழா வெகு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான தியாகராஜர் ஆராதனை விழா கடந்த ஜனவரி 6ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கியது.

விழாவை புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். விழாவின் சிகர  நிகழ்ச்சியான ஆராதனை விழா இன்று ஜனவரி 11ம் தேதி நடைபெற உள்ளது.  

தஞ்சாவூர்

தியாகராஜரின் ஆராதனை விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். உலகம் முழுவதும் இருந்தும் இசை ஆர்வலர்களும் இந்த நிகழ்ச்சியில் வருடா வருடம் கலந்து கொள்வார்கள். இன்று காலை  9 மணிக்கு நடைபெறும் ஆராதனை விழாவில் 500க்கும் மேற்பட்ட கர்நாடக இசை கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொண்டு ஒரே குரலில் பஞ்சரத்தனம் கீர்த்தனைகளைப் பாடி தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்த கீர்த்தனைகள் மூலம்  தியாகராஜர் சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்துவதும் ஒவ்வொரு வருடமும் வழக்கமாக இருந்து வருகிறது. இன்று இரவு 10.30 க்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் 6 நாள் இசை விழா முடிவடையும்.

உள்ளூர் விடுமுறை

 இந்நிலையில், தியாகராஜரின் ஆராதனை விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் தஞ்சாவூரில் இன்று ஜனவரி 11ம் தேதி புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் உ த்தரவிட்டுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web