திருப்பதி பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட் இன்று வெளியீடு!

 
Tirupati

கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகு திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். அனைத்து தரப்பு மக்களும் சென்று தரிசனம் செய்யும் வகையில் இலவச தரிசன டிக்கெட் விற்பனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பெரியளவில் திரண்டு செல்கின்றனர். முக்கிய நாட்களில் ஒரு நாளுக்கு மேலாக காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.

Tirupati

இந்த நிலையில், திருமலை ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதத்துக்கான இலவச டோக்கன்கள் இன்று (ஜன. 24) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாத திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் ஜன. 24-ஆம் தேதி மாலை 3 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. கோயிலில் பாலாயம் நடைபெறும் பிப்.23 முதல் பிப்.28 ஆம் தேதி வரை தவிர்த்து மற்ற நாள்களுக்கு டிக்கெட் வெளியிடப்படும் எனவும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tirupati

இந்த டிக்கெட்டுகளை பக்தா்கள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web