திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி மகன் மாரடைப்பால் மரணம்!! அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் சோகம்!!

 
சேகர் ரெட்டி

ஆந்திரா மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி. இவருடைய மகன்  சந்திர மௌலி ரெட்டிக்கும்,  தொழிலதிபர் சேகர் ரெட்டியின் மகளுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் சேகர் ரெட்டி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில ஆலோசனை குழு தலைவரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் திருமணம் ஜனவரி 26, 2023ல் சென்னையில் நடைபெற இருந்தது.

சேகர் ரெட்டி

 ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இவர்களின் திருமணம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதில் இருவீட்டாரும் திருமணத்திற்கு அழைப்பிதழ்களை கொடுத்து உறவினர்கள், நண்பர்களை அழைக்கும் பணியில் இருந்து வந்தனர்.  அதே போல் மணமகன் சந்திரமௌலியும் தனது திருமண அழைப்பிதழை உறவினர்கள் நண்பர்களுக்கு கொடுத்து வந்த நிலையில் சந்திர மௌலி ரெட்டிக்கு திடீரென  மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்திரமௌலிக்கு டிசம்பர் 18ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனையின் மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கின்றன.  அங்கு சிபிஆர் பரிசோதனைகள் முடிந்து  தற்போது கேத் லேப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சேகர் ரெட்டி மருமகன்

அங்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு இதய தமணியில் ஸ்டாண்ட் கருவி பொருத்தப்பட்டிருந்தது. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வரும் நிலையில் அவர் உடல் நிலை மோசமாகி வருவதாகவும்,  மருத்துவ நிபுணர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டிருந்தது.  

அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் உறவினர்களும் பிரார்த்தனை செய்து வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  திருமணத்திற்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் மணமகன்  உயிரிழந்தது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web