இன்று தமிழகம் முழுவதும் கோயம்பேடு உட்பட காய்கறி மார்க்கெட்கள் விடுமுறை!

 
கோயம்பேடு மார்க்கெட்

இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில், சென்னை கோயம்பேடு உட்பட காய்கறி,பூ மார்க்கெட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. வருடம் முழுவதும் உழைப்பவர்கள் பொதுவாக இது போன்ற மே முதல் தினம், காணும் பொங்கல் போன்ற தினங்களில் மட்டுமே விடுமுறையை அனுபவித்து ஓய்வெடுக்கிறார்கள். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக தொடர் விடுமுறையில் பலரும் சொந்த ஊருக்கு சென்றிருக்கும் நிலையில், இன்று காணும் பொங்கலையொட்டி பல மாவட்டங்களில், சென்னை கோயம்பேடு மார்க்கெட் உட்பட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து  மட்டுமல்ல ஆந்திரா, கேரளா என இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு கொள்முதல் செய்யப்பட்டு  சென்னை மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் காய்கறிகள் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன.

கோயம்பேடு மார்க்கெட்

பொங்கல் பண்டிகைக்காக கோயம்பேட்டில் சிறப்பு காய்கறி சந்தை செயல்பட்டது. இந்த சிறப்பு சந்தையில் பொங்கலுக்கு தேவையான காய்கறிகள் , இஞ்சி, மஞ்சள், காப்பு, மாவிலை , தோரணங்கள் என அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. பொதுவாக கோயம்பேடு  மார்க்கெட்   பராமரிப்பு பணிக்காக  மாதத்தில் ஒரு நாள்  விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.  

கோயம்பேடு மார்க்கெட்

இந்த சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள், இஞ்சி, மண்பானை  என பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்ல ஆந்திரா, கேரளா என இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு கொள்முதல் செய்யப்படுகின்றன.  இங்கிருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் காய்கறிகள் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள், இஞ்சி, மண்பானை  என பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனையில் சக்கை போடு போட்டன. இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக இன்று ஜனவரி 17ம் தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்

From around the web