இன்று 74 வது குடியரசு தினம்!! முப்படை அணி வகுப்பு, கண்கவர் கலைநிகழ்ச்சிகள் கோலாகல கொண்டாட்டம்!!

 
திரௌபதி முர்மு

இந்தியாவின் 74வது குடியரசு தினம் தலைநகர் டெல்லியில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.  குடியரசு தின விழாவில் ஜனாதிபதியாக பதவியேற்ற திரௌபதி முர்மு முதன்முறையாக கொடியேற்றுகிறார். கடமைப் பாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில்  பிரதமர் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

குடியரசு தினம்

நமது நாட்டின் குடியரசு தின விழாவுக்கு எகிப்து அதிபர் சிறப்பு விருந்தினராக  கலந்து கொள்வது இதுவே முதல் முறை.இந்திய ராணுவ படை பிரிவுடன் இன்றைய அணி வகுப்பில் எகிப்து ராணுவ படைப்பிரிவும் கலந்து கொள்வதுகுறிப்பிடத்தக்கது.  வரலாற்று சிறப்புமிக்க கடமைப் பாதையில் கலை நிகழ்ச்சிகளும், வீரதீர செயல்களும், ராணுவத்தின் பலத்தை  உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் முப்படைகளின் பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்புகளும் நடைபெற உள்ளது. முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் ஏற்று கொள்கிறார். காலை 10.30 மணிக்கு தொடங்கப்படும் இந்த விழா பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுடன்  பிற்பகல் 12 மணி வரை தொடரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதற்கு முன்னதாக தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். விஜய் சவுக் பகுதியில் இருந்து கடமைப்பாதை வழியாக ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது. ராணுவ பலத்தை காட்டும் வகையில் அதிநவீன பீரங்கிகள், டாங்கிகள், ஆகாஷ் ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெற உள்ளன.

நாளை சுதந்திர தினம்
மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர், அதிநவீன டிரோன்கள், ரபேல் போர் விமானங்கள் உட்பட நவீன போர் விமானங்கள் கொண்ட விமானப் படை சாகசமும் நடைபெறும். அத்துடன் ஆயுதப்படையினர் மற்றும் துணை ராணுவப்படையினரின் அணிவகுப்பு, மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள், துறைவாரியான அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, குழந்தைகளின் கலாச்சார நிகழ்ச்சிகள், மோட்டார் சைக்கிள் சாகசங்கள் அனைத்தும் நடைபெற உள்ளன.  பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுக்கின்றன. 
 நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வலுவான பாதுகாப்பு அனைத்தையும்  சித்தரிக்கும் வகையில்  23 அலங்கார ஊர்திகளும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில்  17 ஊர்திகளும் ,  மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் சார்பில் 6 ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் இடம்பெற உள்ளன.  மேலும் ராணுவ டாட்டு மற்றும் பழங்குடியினர் நடனம், வீரக்கதைகள் 2.0, வந்தே பாரதம் நடனப்போட்டி 2.0, தேசிய போர் நினைவிடத்தில் ராணுவ நிகழ்ச்சிகள் மற்றும் கடலோர காவல்படையின் இசை நிகழ்ச்சி, அகில இந்திய அளவிலான பள்ளி இசை நிகழ்ச்சி போட்டி, டிரோன் காட்சி  என புதிய கலாச்சார நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரதமர், குடியரசு தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உயரதிகாரிகள் பலர் கலந்து கொள்வதால் உச்சகட்ட பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web