பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! கலெக்டர் உத்தரவு!

 
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலிமை குறைந்தது. 
தற்போது சென்னைக்கு அருகே நிலைக் கொண்டுள்ள இந்த ஆழ்ந்த தாழ்வு பகுதி காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. 

நாளை இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?!

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். 

மாணவிகள் விடுமுறை மகிழ்ச்சி
மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக அவரவர் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும், மழை நேரத்தில் வெளியே வராமல், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இன்று பள்ளி, கல்லூரிகள் சிறப்பு வகுப்புகளை நடத்த கூடாது என்றும், உத்தரவை மீறி நடத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web