இன்று வளமான வாழ்வளிக்கும் தை அமாவாசை!! இந்த தவறுகளை மட்டும் செய்தீடாதீங்க!!

 
அமாவாசை தினத்தில் இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க!

பொதுவாக அமாவாசை தினங்களில் முதல் வழிபாடு நமது பித்ருக்களுக்கு தான் செய்ய வேண்டும் என்பது நமது சாஸ்திரத்தில் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நம் வளமான வாழ்வுக்கு முன்னோர்களின் ஆசீர்வாதமும் தேவை என்பதை உணர வேண்டும்.அத்துடன் மாதத்திற்கு ஒரு முறையாவது அமாவாசை தினங்களிலாவது அடுத்த தலைமுறைக்கு முன்னோர்களின் நினைவை எடுத்து சென்று அதன் அவசியத்தை வலியுறுத்தவும் அமாவாசை வழிபாடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எல்லா மாத அமாவாசை வழிபாடும் அவசியமானவை தான் என்ற போதிலும் தை அமாவாசை கூடுதல் சிறப்பு வாய்ந்தது.  தை மாதத்தில் வரும் அமாவாசையும், ஆடி மாத அமாவாசையும், புரட்டாசி மாத அமாவாசையும் மிகவும் சிறப்பு வாய்ந்து. இந்த நாளில்  முன்னோர் வழிபாட்டை தவறவிடக்கூடாது. இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் பாவங்கள் நீங்குவதோடு, குழந்தைபேறு, குடும்ப அமைதி உள்ளிட்டவை கிடைப்பதாகவும் மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.  உத்திராயண புண்ணிய காலமான முதல் அமாவாசையில் பித்ருக்களுக்கு படையலிட மனம் மகிழ்ந்து சந்ததிகளை வாழ்த்துவர். இந்த மாதத்தில் தான்  சூரியன் தனது பயணப்பாதையை மாற்றுகிறார். சூரியன் மகரத்தில் உச்சம் பெறும். அதனால் இந்த மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 


தை அமாவாசை  நாளை  ஜனவரி 21ம் தேதி சனிக்கிழமை வருகிறது. அமாவாசை திதியானது அதிகாலை 04.25 மணிக்கு துவங்கி, ஜனவரி 22ம் தேதி அதிகாலை 03.20 மணி வரை உள்ளது. அமாவாசை திதியானது காலையிலேயே துவங்கி விடுவதால் காலையிலேயே நீராடி முன்னோர்களை வணங்கலாம். மகாளாய அமாவாசையான  புரட்டாசி அமாவாசை நமது  பித்ருக்கள் பூலோகம் வந்திருந்து மகாளய பட்சகாலத்தில் தங்கி இருந்து அருள் புரிவார்கள். அதே போல தை அமாவாசை அன்று பித்ருக்கள் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி பிதுர் லோகம் திரும்புவார்கள் என்பது ஐதீகம்.தை அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசியும் கிடைக்கும். 

தர்ப்பணம் கொடுக்கும் போது செய்யக் கூடாதவை:

நாளை நாள் முழுவதும் அமாவாசை திதி இருந்தாலும் காலையிலேயே அதாவது உச்சிக்குள் நண்பகல் 12மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து விடுவது சிறப்பு.  

உச்சி பொழுதிற்கு பிறகு தர்ப்பணம் கொடுக்க கூடாது.

 தர்ப்பணம் கொடுக்கும் வரை வாசலில் கோலமிடுதல் கூடாது..

முன்னோர்களை வரவேற்க தயாராக இருக்க வேண்டும்.

அவர்களுக்கு நன்றி கூறி நமது வாழ்க்கை சிறக்க மனமுருக பிரார்த்தனை செய்ய வேண்டும். 

அமாவாசை
 

காலை 6.30 மணிக்குள் அல்லது  மதிய வேளை அல்லது  சூரியன் மறைவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம்.

ராகுகாலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.

அதே போல் தர்ப்பணம் கொடுக்கும் போது  கோத்திரம், குலதெய்வம்,3 தலைமுறையின் பெயர்களைக் கூறி தர்ப்பணம் செய்ய வேண்டும்.


நம் பித்ருக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள்

அவர்களை இந்த அமாவாசையில் வழிபட்டால் புண்ணியமும், செல்வமும் சேரும் என்பது ஜோதிட அன்பர்களின் வாக்கு.

நம் வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டியது அவசியம்.

அமாவாசை

தை அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி பிதுர்லோகம் திரும்பி செல்வதாக ஐதீகம்.தை அமாவாசை தர்ப்பணத்தை நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கொடுக்கலாம். நமது முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து நமக்கு நல்லருள் புரிய வேண்டி வழிபாடு செய்வதே தர்ப்பணம்.
தர்ப்பணம் செய்த பின் வீட்டில், தலை வாழை இலையில் முன்னோர்களுக்கு படையல் போட்டு விட்டு, சாப்பிடலாம். அத்துடன் பசுமாட்டுக்கு அகத்தி கீரை உண்ண கொடுப்பது பலன் தரும். அகத்தி கீரை கிடைக்காதவர்கள் பச்சரிசி அரிசி கலந்த உணவு அளிப்பது கூடுதல் சிறப்பான பலன்களை தரும். 

அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்து வீடு வாசல் சுத்தம் செய்து முன்னோர்களை வரவேற்க தயாராக வேண்டும். தர்ப்பணம் கொடுக்கும் வரை உபவாசம் இருக்கலாம். வெங்காயம், பூண்டு சேர்க்காத உணவுகளை சமைத்து படையலிட வேண்டும். காக்காக்கு அன்னமிட்ட பிறகு இயன்ற அளவு தானம் செய்யலாம். அதன் பிறகு உபவாசம் முடிக்கலாம். இதனால் பித்ருக்கள் மனம் மகிழ்ந்து  நம் வேண்டியதை வழங்க இறைவனிடம் விண்ணப்பம் செய்வார்கள்.அவர்களின் ஆசியும் இருந்தால் மட்டுமே நாம் வேண்டியவை பெற முடியும் என்பது சாத்திரங்கள் கூறும் வாக்கு. முன்னோர்களை நினைவு கூர்வோம். வளமான வாழ்வு பெறுவோம். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web