இன்றே கடைசி!! 13,404 பணியிடங்கள்!! உடனே அப்ளை பண்ணுங்க!!

 
மாணவிகள்

மத்திய அரசின்  இந்திய கல்வித்துறை அமைச்சகத்தின் மூலம் இந்தியா முழுவதும் நிர்வகிக்கப்பட்டு வருவது கேந்திரிய வித்யாலயா பள்ளிகள். இந்த வகை பள்ளிகள் இந்தியாவில் மட்டுமின்றி காத்மாண்டு, மாஸ்கோ, டெஹ்ரான் பகுதிகளிலும் செயல்பட்டு வருகிறது.  கேந்திரிய வித்யா பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் உட்பட பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா

இந்த ஆட்சேர்ப்பின் மூலம், 13,404 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்  ஆசிரியர் பணி நிலையின் கீழ் 11,747 இடங்களும், ஆசிரியர் நிலை இல்லாத பணி நிலையில் 1,657 இடங்களும் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெற இன்று தான் கடைசி நாளாகும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்த அனைத்து தகவல்களும் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

job

 அனைத்து பதவிகளுக்கும், நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 3 ஆண்டுகள் வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு https://kvsangathan.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web