இன்றே கடைசி !! பொங்கல் சிறப்பு தொகுப்பு பெற டோக்கன் வாங்கிட்டீங்களா?!

 
டோக்கன்


பொங்கல் பண்டிகைக்கும் இன்னும் சில தினங்களே உள்ளன. நாளை முதல் ரேஷன் கடைகளில்  பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஜனவரி 12ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் வீடுவீடாக பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் பொங்கல் தொகுப்பில் விலையில்லா வேஷ்டி , சட்டை, 1 கி. பச்சரிசி, 1கி. சர்க்கரை, முழுக்கரும்பு இவைகளுடன் ரொக்கப்பணம் ரூ1000மும் சேர்த்து வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாளை முதல் கொரோனா நிதி! வீடு வீடாக டோக்கன் விநியோகம்!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க தினமும் 200 முதல்‌ 250 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்‌ பரிசு வழங்கப்பட உள்ளது. டோக்கன்‌ பெற இன்றே கடைசி நாள் என்பதால் அதனை வாங்காதவர்கள் உடனடியாக பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

அசத்தல்!! மக்களே பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற தயாராகிட்டீங்களா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

மேலும் இது குறித்து விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில் தகுதியான அனைவருக்கும்‌ பொங்கல்பரிசு மற்றும்‌ ரொக்கப்பணம்‌ வழங்கப்படும்‌. குடும்ப அட்டையில்‌ இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில்‌ யாரேனும்‌ ஒருவர்‌ பொங்கல்‌ பரிசு மற்றும்‌ ரொக்கப்பணத்தை பெற்றுக்‌ கொள்ளலாம்‌. பொங்கல்‌ பரிசு பெறுபவர்களின் அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்ணுக்கு இது குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும்‌ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில்  ஒவ்வொரு ஆண்டும் தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகைக்கு  தமிழக அரசு சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் பொங்கல் தொகுப்பு வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. புது உத்தரவாக பயனாளர்களுக்கு செங்கரும்பு வழங்கப்பட இருக்கிறது. இந்த பணிகளுக்காக ஜனவரி 2ம் தேதி முதல்வர் துவக்கி வைக்கப்பட இருந்த நிலையில், கரும்பு கொள்முதல் செய்யப்படாததால் ஜனவரி 9ம் தேதிக்கு மாற்றப்பட்டது. 

இதன் காரணமாக வீடு வீடாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த டோக்கன் விநியோகமும் தாமதமானது.  இத்தனைக் குளறுபடிகளையும், எதிர் கட்சியாக இருந்த போது மு.க.ஸ்டாலின் எப்படி எதிர்கொண்டு விமர்சித்திருப்பார் என்று நக்கலாக சிரிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் தொல்.திருமா என பல அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  முன்னதாக கரும்பு உட்பட பொங்கல் சம்பந்தமான பொருட்கள் இல்லாமல் பொங்கல் தொகுப்பு வழங்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web