நாளை மண்டல பூஜை !! சபரிமலையில் குவியும் பக்தர்கள்!!

 
சபரிமலை

கேரளாவில் சபரிமலை உலக பிரசித்தி பெற்றது. சபரி மலை மாதாந்திர பூஜைகளுக்காக திறக்கப்படுவதுண்டு.  ஆந்த வகையில் கார்த்திகை மாதம் ஆதலால் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது.  கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் நடை திறந்த நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்து வந்தது.

சபரிமலை கோயில் வருமானம் 9 மடங்கு அதிகரிப்பு..!

தற்போது ஆன்லைன்  மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்யும் நடைமுறையும் பின்பற்றப்பட்டு வருகிறது.  சில நாட்களில் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்து வருகிறது. இதுதவிர  நிலக்கல் உட்பட பல இடங்களில் உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டு வருகின்றனர்.  சில நாட்களில்  பம்பை முதல் சன்னிதானம் வரை கூட்ட நெரிசல் ஏற்பட்டு விடுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில்  குழந்தைகள், 50 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு தனி வரிசை தரிசனம் வழங்கப்பட்டது.  

இந்நிலையில்  சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை நாளை  டிசம்பர் 27ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா 1973ம் ஆண்டு சபரிமலைக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி  இன்று டிசம்பர் 26ம் தேதி மண்டல பூஜைக்கு முதல் நாள் மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இந்த தங்க அங்கி ஆரன்முளா பத்தினம்திட்டா பார்த்தசாரதி கோவிலில்  இருந்து சபரிமலைக்கு பாதயாத்திரையாக டிசம்பர்  23ம் தேதி தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது.

ஐயப்பன் சபரிமலை இருமுடி

இன்று சன்னிதானத்தை வந்தடையும் இந்த ஊர்வலம்  பிற்பகலில்  பம்பை கணபதி கோவில் வந்தடைகிறது. அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு வருவது வாடிக்கை.  இன்று  மாலை 5.30 மணிக்கு சன்னிதானம் வந்தடையும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். இதனை நேரில் காண பக்தர்கள் வெள்ளம் அலைமோதும். . 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web