நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை?! உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

 
டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

டாஸ்மாக் கடைகளுக்கு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் உலக இளைஞர்கள் தினத்தன்று விடுமுறை வழங்கவேண்டும். அன்று மதுபான கடைகளைத் திறக்க அனுமதிக்க க் ஊடாது என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கன்னியாகுமரியில் வசித்து வரும் ஜெயந்தி, இது குறித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் நான் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன். ஜனவரி 12ம் தேதி உலக இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.  தமிழகத்தை பொறுத்தவரை இளைஞர்களில் பலர்  மதுவுக்கு அடிமையாகி  வாழ்க்கையைத் தொலைத்து வருகின்றனர். 

சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!
வருங்காலத்தில் நாட்டின்  எதிர்கால தூண்களான இவர்கள்  மதுவுக்கு அடிமையாகி வருவது தொடர்ந்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். இது குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தும் வகையில்  டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.  ஒரு ஆண்டில்  திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, குடியரசு தினம், சுதந்திர தினம் உட்பட  8 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.இந்த வரிசையில் உலக இளைஞர்கள் தினத்தையும் சேர்த்து கொள்ளலாம். அன்று ஒரு நாளாவது இளைஞர்கள் குடியை மறந்து தமது வருங்காலத்தை யோசிக்க வழிவகை செய்யலாம்.

டாஸ்மாக்

மேலும் மது அருந்துவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை உலக இளைஞர்கள் தினத்தன்று ஏற்படுத்தலாம். இது குறித்து பலமுறை பல  அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, உலக இளைஞர்கள் தினத்தன்று தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவுபிறப்பிக்க வேண்டு என  மனுவில் கோரியிருந்தார். 

இந்த மனுவின் மீதான விசாரணையில் மனுதாரரின் கோரிக்கை மனுவை ஏற்று தமிழக மதுவிலக்கு மற்றும் கலால் துறை கமிஷனர், தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு 12 வாரத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web