நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாணவர்கள் உற்சாகம்!!

 
இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

நீலகிரி மாவட்ட மக்களுக்கு புது வருஷம் கொண்டாட்டமாக பிறக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தை உள்ளூர் திருவிழாவோடு சேர்த்து கொண்டாடுகின்றனர். இந்த கொண்டாட்டங்களில் உள்ளூர் மக்கள்  முழு ஈடுபாட்டுடன் கொண்டாடி மகிழும் வண்ணம் ஜனவரி 4ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும், படுகர் இன மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா இந்த வருடம் ஜனவரி 4ம் தேதி நடைபெறுகிறது.

ஹெத்தையம்மன் கோவில் திருவிழா நீலகிரி ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே உள்ள ஜெகதளாவை தலைமையிடமாக கொண்டு திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படும். அதன்படி ஜெகதளா, காரக்கொரை, பேரட்டி, ஓதனட்டி, மஞ்சுதளா, மல்லிக்கொரை, பெரிய பிக்கட்டி, சின்ன பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களை அடக்கிய ஆரூர் சார்பில் ஜனவரி மாதத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை  கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. நடப்பாண்டை பொறுத்தவரை  நாளை ஜனவரி 4ம் தேதி அன்று சிறப்பாக கொண்டாடப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  திருவிழாவை முன்னிட்டு 8 கிராம மக்கள் விரதம் இருந்து பாத யாத்திரை மேற்கொள்வார்கள். 

இந்நிலையில், ஹெத்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 4ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார். அதே சமயம் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மட்டும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி

ஜனவரி 4ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜனவரி 21ம்தேதி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை நீலகிரி மாவட்டத்தில் வேலை நாளாக இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web