நாளை உள்ளூர் விடுமுறை! வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கலெக்டர் அறிவிப்பு!

 
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருச்சி

நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து  பள்ளி, கல்லூரிகள், அரசு ஊழியர்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து திருச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இன்று புது வருஷம் துவங்கிய நிலையில், தமிழகம் முழுவதுமே  புதுவருட கொண்டாட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. அதிகாலை முதலே ஆலயங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிட்டனர்.

மார்கழி மாதத்தின் துவக்கத்தில் இருந்தே திருச்சி மாவட்டம் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பியிருக்கிறது. உலக புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்க லட்சக் கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். பகல் பத்து, இரா பத்து நிகழ்வுகளில், விழாவின் உச்சக்கட்டமான சொர்க்க வாசல் திறப்பும், வைகுண்ட ஏகாதசியும் நாளை ஜனவரி 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாளை ஜனவரி 2ம் தேதி திங்கட்கிழமை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறையை அறிவித்து திருச்சி  மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

ஸ்ரீரங்கம் திருச்சி ரங்கநாதர்

பிற மாவட்டங்களில், மாநிலங்கள் என்றில்லாமல் உலகம் முழுவதும் இருந்தும், பக்தர்கள் ஸ்ரீ ரெங்கநாதரை தரிசிக்க மார்கழி மாதத்தில் திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு வருகை தருகிறார்கள். வைணவ தலங்களில் முதன்மையானதும், மிக முக்கியமானதும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயம். இந்நிலையில், ஸ்ரீரங்கத்தில், வைகுண்ட ஏகாதசிக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள்.

ஸ்ரீரங்கம் தேரோட்டம்

அன்றைய தினம் பக்தர்களின் வசதிக்காகவும், உள்ளூர்வாசிகள் திருவிழாவைக் கொண்டாடும் வகையிலும், திருச்சி ஸ்ரீரங்கத்தில் 'வைகுண்ட ஏகாதசி' விழாவை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் முழுவதும் நாளை ஜனவரி 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web