நாளையே கடைசி!! 10,11,12ம் வகுப்பு தனித்தேர்வர்களே தயாரா இருங்க!!

 
தேர்வுகள்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தன. நடப்பு கல்வியாண்டில் தொடக்கம் முதலே நேரடி வகுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 10,11, 12ம் வகுப்பு பொது தேர்வுகளை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள்  டிசம்பர் 26ம் தேதி முதல் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து வருகின்றனர்.

தேர்வு

விண்ணப்பிக்க விரும்பும் தேவர்கள் ஜனவரி 3 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி நாளையுடன் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைய உள்ளது.  ஜனவரி 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தட்கல் முறையில் 10ம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.500 கூடுதல் கட்டணமும், இதே போல், 12ம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.1000 கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

exam தேர்வு மாணவிகள் பரீட்சை கல்லூரி

சிறப்பு கட்டணங்களை செலுத்தி ஜனவரி 5ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு  http://www.dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில்   அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களும்  அணுகலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web