இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம்! கூட்டத்துல சிக்கிக்காதீங்க!

 
போக்குவரத்து மாற்றம்

சென்னையின் பல பகுதிகளில் இன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் என தெரிந்து கொண்டு வெளியே புறப்படுங்க. வழக்கமாக பொங்கல் திருவிழாவுக்கு சொந்த ஊருக்கு செல்பவர்களால் வெறிச்சோடி களையிழந்து காணப்படும் சென்னை நகரம், இம்முறை சென்னை சங்கமம், பொருட்காட்சி, புத்தக திருவிழாக்களால் எங்கெங்கு காணினும் மக்கள் பெருவெள்ளமாக இருக்கிறது. தொடர் விடுமுறையில் வழக்கத்தை விட அதிகளவில் கடற்கரையில் பொதுமக்கள் கூடுகின்றனர். இந்நிலையில், இன்று காணும் பொங்கலையொட்டி, சென்னையில் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது. அதனால், முன்கூட்டியே திட்டமிட்டு உங்கள் கேளிக்கைப் பயணத்தை மேற்கொள்ளுங்க. கூட்டத்துல வண்டியைப் பார்க்  பண்ண முடியாம சிக்கிக்காதீங்க. நல்ல நாள் அதுவுமா டேக் டைவர்ஷன்லேயே உங்களுடைய பொழுது வீணாகாம பார்த்துக்கோங்க. பொதுவாக இன்று கடற்கரை, பார்க், ஷாப்பிங் மால்கள், புத்தக கண்காட்சி, பொருட்காட்சி, வண்டலூர் மிருக காட்சி சாலை, செம்மொழி பூங்கா, சென்னை சங்கமம் என பொதுமக்கள் அதிகளவில் கூடி  கொண்டாடி மகிழ்வர். இதன் அடிப்படையில் சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று ஜனவரி 17ம் தேதி ஒரு நாள் மட்டும்  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்று ஜனவரி 17ம் தேதி  காணும் பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும்,  பொதுமக்கள் கூடுவர் என  எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சூழ்நிலைக்கு ஏற்றபடி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

போக்குவரத்து மாற்றம்


அதன்படி  காமராஜர் சாலையில் பொதுமக்கள் எண்ணிக்கை சாலையில் அதிகமாகும் வரையில் எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட மாட்டாது. அதே நேரத்தில் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலைக்கு  வடக்கில் இருந்து வரும் வாகனங்கள் பாரிமுனை முத்துசாமி பாயின்ட், வாலாஜா பாயின்ட், அண்ணாசாலை பெரியார் சிலை, அண்ணாசிலை, வெல்லிங்டன் பாயின்ட், ஸ்பென்சர் சந்திப்பு, பட்டுளாஸ் சாலை, மணிக்கூண்டு, ஜி.ஆர்.எச்.பாயின்ட் வழியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்படும். 

போக்குவரத்து மாற்றம்
அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பி விடப்பட்டு பாரதி சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை வழியாக செல்லலாம். 
பாரதி சாலையானது கண்ணகி சிலையில் இருந்து ஒருவழி பாதையாக மாற்றப்படும். 

  • வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்வதற்கு தடை . 
  • பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் சாலை நோக்கி செல்ல  அனுமதி .
  • பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல தடை .
  • வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை வழியாக  வாகனங்கள் செல்ல அனுமதி .

இது தவிர சூழ்நிலைக்கு ஏற்றபடி சென்னை போக்குவரத்து போலீசார் செய்யும் மாற்றங்கள் அனைத்தும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கு ஒரு முறை கூகுள் வரைபடத்தில் RoadEase app மூலம் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும். இதனை பயன்படுத்தி  'கூகுள் மேப்'  வழியாக  மாற்று பாதைகளை கண்காணித்து செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்

From around the web