போக்குவரத்து விதிமீறல்! நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம்!

 
விஜய்

நடிகர் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ’வாரிசு’ திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்க்கு சென்னை போக்குவரத்து போலீசார், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறி ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.

விஜய்

இதற்கும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தை வெளியிடுவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நடிகர் விஜய் பயன்படுத்தி வரும் காரில் கருப்பு நிற பிலிம் ஒட்டி வந்ததால் சென்னைப் போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

விஜய்
போக்குவரத்து விதிகளின் படி, நீதிபதிகள், முக்கிய தலைவர்கள் மட்டுமே அவர்களது காரில் கருப்பு ஸ்டிக்கர்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து விதிமுறையை மீறி தனது காரில் கருப்பு நிற பிலிம் ஒட்டியதால் நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web