ஜல்லிக்கட்டில் மேலும் ஒருவர் மரணம்!! வேடிக்கை பார்க்க வந்த போது பரிதாபம்!!

 
ஜல்லிக்கட்டு

தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகை 2 நாட்களாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழரின் பெருமையை பறை சாற்றும் வகையில் பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மேலும் சில மாவட்டங்களில் சேவல் சண்டை என தமிழர் திருநாள் களை கட்டி வருகிறது.

ஜல்லிக்கட்டு

அதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 100க்கும் மேற்பட்ட இடங்களில்  ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள்   நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே.ராயபுரம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி   மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் களமிறங்கின. இதனை நேரில் கண்டுகளிக்க  ஆயிரக்கணக்கான  வந்திருந்தனர். 

ஜல்லிக்கட்டு
 சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிராமத்தில் வசித்து வரும்  கணேசனும் மஞ்சு விரட்டு பார்க்க வந்துள்ளார். மஞ்சுவிரட்டு பார்த்துக் கொண்டிருந்தபோது கணேசனை காளை முட்டியதில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கனவே நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜூம்,  திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த அரவிந்தும், காளை முட்டித் தள்ளியதில் பலியானார். இந்நிலையில் மஞ்சுவிரட்டு பார்க்க வந்த கணேசனும் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web