திரையுலகில் சோகம்!! பிரபல சண்டை பயிற்சியாளர் காலமானார்!!

 
ஜூடோ ரத்னம்

தமிழ் திரையுலகில் 70 மற்றும் 80களில்  முண்ணனி கதாநாயகர்களாக  ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களில் சண்டை பயிற்சியாளர்  ஜூடோ கே.கே.ரத்னம். இவருக்கு வயது 93. இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரையுலக நட்சத்திரங்கள், நண்பர்கள், பிரபலங்கள், தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜூடோ ரத்னம்

இவர் இதுவரையில் 1500 படங்களுக்கு மேல் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியவர்.  சூப்பர் ஸ்டார்  ரஜினியின் படங்களில் சண்டை   என்றாலே உடனே ரசிகர்களின் நினைவுக்கு வருவது ஜூடோ ரத்னம்தான் என சொல்லும் அளவுக்கு புகழ்பெற்றவர். இதுவரையில் ரஜினியின் 46 படங்களுக்கு ஜூடோ ரத்னம்தான் சண்டை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


1992ல்  வெளியான ‘பாண்டியன்’ படம் வரை ஜூடோ ரத்னம்  சண்டை இயக்குநராக பணியாற்றியவர். ‘தாமரைக்குளம்’, ‘கொஞ்சும் குமரி’, ‘போக்கிரி ராஜா’, ‘தலைநகரம்’ படங்களில் நடிகராகவும் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றார்.  1200க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு சண்டைப்பயிற்சியாளராக பணியாற்றிய ஜூடோ ரத்னத்தின் பெயர்  கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.  2019ல் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றவர். தமிழிலில் மட்டுமல்ல தென்னிந்திய படங்கள் முழுவதிலும் பிரபல சண்டை பயிற்சியாளராக இருந்தார். மறைந்த பிரபல கன்னட நராஜ்குமார் நடித்த 52 படங்களிலும்  ஜூடோ ரத்தினம் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். 

ஜூடோ ரத்னம்


இந்நிலையில், இன்று உடல்நலக்குறைவால் ஜூடோ ரத்னம் அவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் காலமானார். அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக ஸ்டண்ட் யூனியன் சங்க அலுவலகத்தில் வைக்கப்படும் என  தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் பிறகு  மீண்டும் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யபட உள்ளது. ஜூடோ ரத்னம் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web