திருமண மண்டபத்தில் சோகம்! வாழ்த்த வந்திருந்த பெண் செப்டிக் டேங்கில் விழுந்து பலி!

 
சுஜிஜா

திருமண மண்டபத்தில், கழிவறை செப்டிக் டேக் உடைந்து விழுந்ததில், திருமணத்திற்கு வந்திருந்த இளம்பெண் பலியான சம்பவம் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களையும், நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

கன்னியாகுமரி வேர்கிளம்பி அருகே ஒட்டலிவிளை பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த அஜித் ரோமியோ என்பவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் முதலார்  பகுதியைச் சேர்ந்த பால் வெட்டும் தொழிலாளியான மோகன்தாஸ் மற்றும் அவரது மனைவி  சுஜிஜா(48)ஆகியோரும் கலந்து கொண்டனர். திருமண மண்டபத்தில் கூட்டம் நிரம்பி இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக கழிவறை செப்டிடேங் உடைந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் மோகன்தாஸ் மற்றும் அவரது மனைவி சுஜிஜா ஆகியோர் செப்டிக் டேங்குக்குள் கீழே விழுந்தனர். 

செப்டிக்

உடனடியாக மண்டபத்தில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் குலசேகரம் தீயணைப்பு துறையினர் திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வாகனத்தை தீயணைப்பு துறை ஓட்டுநர் சுஜின் ஓட்டிச் சென்ற நிலையில், மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே குறுகிய சாலையில் தீயணைப்பு வாகனம் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக  ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து தீயணைப்பு வாகனம் கால்வாயில் கவிழ்ந்தது.

அதன் பின்னர் தக்கலை தீயணைப்பு துறையினரின் உதவியோடு  செப்டிக் டேங்கில் விழுந்த மோகன்தாஸ் மற்றும் அவரது மனைவி சுஜிஜா ஆகியோரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கி சுஜிஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் மோகன்தாஸ் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டார்.

கன்னியாகுமரி

திருவட்டார் காவல் துறையினர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் இவர்களை மீட்க வந்த தீயணைப்பு துறை வாகனம் கால்வாயில் கவிந்து விபத்துக்குள்ளானது குறித்தும் வழக்கு பதிவு செய்தனர். திருமணத்திற்கு வந்திருந்து மகிழ்ச்சியோடு மணமக்களை வாழ்த்திய உறவினர்களும், நண்பர்களும், சம்பவ இடத்திலேயே வாழ்த்த வந்திருந்த பெண் உயிரிழந்தது குறித்து சோகத்தில் ஆழ்ந்தனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web