செல்ஃபி பாயிண்ட், இ-பைக் வசதி என ஸ்டைலா மாறுது திருச்சி ரயில் நிலையம்! ரூ.20 கோடி செலவில் ஏர்போர்ட் போல பளபளக்கும்!

 
திருச்சி ரயில் நிலையம்

ஆங்கிலேயர்  ஆட்சிக்காலத்தில் தெற்கு ரயில்வேயின் தலைமையிடமாக இருந்த திருச்சி ரயில் நிலையத்துக்கு துாங்கா ரயில் நிலையம் என்ற பெயர் உண்டு. வடமாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கும் தென்மாவட்டங்களில் இருந்து வட மாவட்டங்களுக்கும் செல்பவர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு முக்கிய சந்திப்பு நிலையமாக இருக்கும் திருச்சி ரயில் நிலை யத்திற்கு நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் பயணிகள் வந்து செல் கின்றனர். 80 ஆயிரம் பயணிகள் கடந்து செல்கின்றனர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி ரயில் நிலையம் பழமை மாறாமல் நவீனப்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 4 ஆண்டுகளாக பணிகள்  நடந்து வந்தது தற்பொழுது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.

ரயில் திருச்சி

நவீன பாதுகாப்பு வசதிகளுடன் அதிக பயணிகளை கையா ளும் வகையில், ரயில் நிலையத்தில் பார்சல் அலுவலகம் அருகே புதிதாக ரூ ரூ.3.15 கோடி செலவில் 2வது நுழைவுவாயில் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. கவுன்டரில் டிக்கெட் பெற்றுவிட்டு, அதன் பின்பகுதிக்கு வந்தால் இப்புதிய நுழைவு வாயிலை அடைய முடியும். இங்கு ஒரே நேரத்தில் 80 பயணிகள் அமரலாம். இந்த நுழைவுவாயிலில் இருந்து நக ம் படிக்கட்டுகள் (எஸ்கலேக் டர்) மூலம் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து பிளாட்பா ரங்களுக்கும் எளிதாக சென்றடையும் வண்ணம் புதிய பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல இப்போதுள்ள கல்லுக்குழி நுழைவுவாயிலுக்கு மாற்றாக புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 8வது பிளாட்பாரம் வழியாகவும் எளிதாக வந்தடையலாம்.

இது குறித்து திருச்சிகோட்டவணிகப்பிரிவு, முதுநிலை மேலாளர் செந்தில்குமார் கூறுகையில் ரயில் நிலையத்துக்குள் நுழையும் வகையில் பாரம்பரியம் மாறாமல் புதிதாக ரூ.4.20 கோடி செலவில் முன்பதிவு டிக்கெட் வசதியுடன் நுழைவு வாயில் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர ரயில் நிலைய வளாகத்தில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பைக்குகள், 400 கார்கள் வரை நிறுத்துவதற் கான இட வசதிகள் மேம்படுத் தப்பட்டுள்ளன. "ரயில் நிலையத்தில் 2வது நுழைவுவாயில் முதல் 8வது பிளாட்பாரம் வரையில் உள்ள அனைத்து பிளாட்பாரங்களிலும் லிப்ட் வசதியுடன் இணைந்த எஸ்கலேட்டர் வசதி ரூ.10.60 கோடி செலவில் 6 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர விமான நிலையத்தில் உள்ளதுபோலவே அனைத்து வசதிகளும் அடங்கிய நவீன பார்சல் பிரிவு, லிப்ட் வசதிகள், அதிநவீன கழிவறைகள், அமைக்கப்பட்டுள்ளது என்றார். 

திருச்சி ரயில் நிலையம்

இ-பைக் வசதிக்கான மையம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், நவீன கட்டுப்பாட்டு அறைகள், அதிநவீன அவசர சிகிச்சை மையம், 5 இடங்களில் ஏடிஎம் மிஷின்கள், செல்பி பாயின்ட், சுற்றுலாத் தகவல் மையம், ஒரே நேரத்தில் 800 பயணிகள் அமரும் வகையில் நவீன இருக்கை வசதிகள், ஏசி மற்றும் குளிர்சாதன வசதிகள் இல்லாத பயணிகள் காத்திருப்பு அறை வசதிகள் என அனைத்தும் அசத்தலாக நவீனப்படுத்தப்பட்டுள்ளது. 2வது நுழைவு வாயில், கல்லுக்குழி நுழைவு வாயில், எஸ்கலேட்டர் என அனைத்து  பணிகளும் 95 சதவீதம் நிறைவேறிவிட்டன. வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த அனைத்து நவீன வசதிகளும் பயணிகளுக்கு கிடைக்கும்'' என்றார்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web