ராமஜெயம் கொலை வழக்கில் நாளை உண்மை கண்டறியும் சோதனை!

 
ராமஜெயம்

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில், சந்தேகத்தின் கீழ் 12 முக்கிய ரவுடிகளிடம் நாளை உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது. சோதனை நடத்தும்  அனுமதி தேதி பெற்றது சிறப்பு புலனாய்வு குழு.

திமுக அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி காலையில் நடை பயிற்சி மேற்கொண்ட போது, மர்ம நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 12 முக்கிய ரவுடிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த திருச்சி நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய் குழு மனு தாக்கல் செய்து விசாரணை நடைபெற்றது. 12 நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து டெல்லிக்கு சென்று 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தும் தேதி அனுமதி  சிறப்பு புலனாய்வு குழு வாங்கியுள்ளனர். 

ராமஜெயம்

குறிப்பாக ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகத்துக்கிடமான 13 நபர்களிடம் (ரவுடி) உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண்6ல் சிறப்பு புலனாய்வு குழுவினர் மனு தாக்கல் செய்தனர்.  இதில் தென்கோவன் என்கின்ற சண்முகம் என்ற நபர் இந்த உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

நேரு கரும்பு ராமஜெயம்

ஏனைய 12 நபர்களும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் 12 நபர்களில் சாமி ரவி, திலீப், சிவா, ராஜ்குமார், சத்தியராஜ், சுரேந்தர், நரைமுடி கணேசன், மோகன்ராம், கலைவாணன், தினேஷ், மாரிமுத்து, லெப்ட் செந்தில் ஆகிய 12 பேரிடமும் நாளை ஜனவரி 17ம் தேதி முதல் ஜனவரி 21ம் தேதி வரை உண்மை கண்டறியும் சோதனை சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web