சாவிலும் ஒன்று சேர்ந்த இரட்டையர்கள்!! சோகத்தில் மூழ்கிய கிராமம்!!

 
சுமேர், சோஹன்

பொதுவாக இரட்டையர்களிடையே  சில குணங்களும் ஒற்றுமையாக இருக்கும். ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வரும் இரட்டையர்கள் 25 வயது சுமேர் சிங் மற்றும் சோஹன் சிங். இவர்கள் இருவரும் சிறு வயது முதலே இணைபிரியாமல் ஒற்றுமையுடன்  இருந்து வந்தனர். எங்கே சென்றாலும் ஒரே மாதிரி உடையணிந்து ஒன்றாகவே செல்வர். இவர்கள் சகோதரர்கள் என்பதை தாண்டி நண்பர்கள் போலவே பழகி வந்தனர். இதில்  சுமேர் சிங்குக்கு சரியாக படிப்பு ஏறவில்லை .

சுமேர், சோஹன்

இவர்  ப்ளஸ் 2 முடித்துவிட்டு, குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சோஹன் சிங் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஜெய்ப்பூரில் தங்கி படித்துக் கொண்டிருந்தார்.  சோஹன் சிங்கின் படிப்பு செலவுக்கு சுமேர் சிங் பணிபுரிந்து  பணம் அனுப்பி வந்துள்ளார். சோஹன் சிங்கை எப்படியாவது ஆசிரியராக ஆக்கிவிட வேண்டும் என்பதே சுமேர் சிங்கின் ஆசையாக இருந்துள்ளது. இவ்வாறு இருவரும் 900 கி.மீ. இடைவெளியில் வசித்து வந்தனர்.இந்நிலையில், சுகேர் சிங் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில், தான் தங்கியிருந்த வீட்டின் மொட்டை மாடி திண்டில் அமர்ந்து   பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைத்தடுமாறி கீழே விழுந்து விட்டதாக நண்பர்கள் தெரிவித்தனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் சிறிது நேரத்திலேயே  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

போலீஸ்
அதே நேரத்தில்  சோஹன் சிங் வீட்டுக்கு தண்ணீர் எடுப்பதற்காக  வெகு தொலைவில் அமைந்திருக்கும் தண்ணீர் தொட்டிக்கு சென்றார். தண்ணீர் எடுக்கும் போது அவரும் நிலைத்தடுமாறி தொட்டிக்குள் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், சுமேரின் நண்பர்கள்  மாடியில் இருந்து சுமேர் விழுந்து இறந்ததை தெரிவித்துள்ளனர்.
இதை கேட்டு அவரது பெற்றோரும், சகோதரர்களும் கதறி அழுதனர்.இந்த சோக செய்தியை தெரிவிக்க அவரை தேடிய போது தான் சோஹனும் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்திருப்பதை கண்டறிந்தனர். இரட்டையர்கள் ஒரே நாளில் ஒரு சில மணிநேர இடைவெளியில் வினோதமான சூழலில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து,  இருவரின் உடல்களையும் ஒரே விறகு அடுக்கில் அருகருகே கிடத்தி சிதைமூட்டியது காண்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web