உதயநிதி அமைச்சராகிறார்... களை கட்டுது திருச்சி! மலைக்கோட்டையில் மல்லுக்கட்டு!

 
நேரு

ஜார்ஜ் கோட்டை உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழாவிற்காக ஒரு பக்கம் அதிர்ந்து கொண்டிருக்க, மலைக்கோட்டை நகரமான திருச்சி எதிர்புறத்தில் கனன்று கொண்டிருக்கிறது. அதிகார மையமாக தமிழகத்தை வலம் வந்து கொண்டிருந்ததோடு, இருபத்தி ஐந்து ஆண்டுகளாக மாவட்டச் செயலாளாராக வலம் வந்து கொண்டிருந்த கே.என்.நேருவிற்கு எதிராக சென்னையில் இருந்து சொந்த ஊரான திருச்சிக்கு தாரை வார்க்கப்பட்டார் அன்பில் மகேஷ்.

திருச்சிக்கு திரும்பிய வேகத்தில் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அமைச்சராக்கியும் அழகு பார்த்தார் ஸ்டாலின். இப்பொழுது மகேஷின் நெருங்கிய நண்பரான உதயநிதி ஸ்டாலின் என்பதுடன் அதற்கும் மேலான என்றே சொல்ல வேண்டிய அளவுக்கு நெருக்கமானவர் அமைச்சராகிறார். திமுகவை பொறுத்தவரை 2ஜி தான் பேசு பொருள். அல்ல அல்ல, 3ஜியும் அதாங்க  3ம் தலைமுறையான கலைஞர் - அன்பில் தர்மலிங்கம், ஸ்டாலின் - அன்பில் பொய்யாமொழி,  உதயநிதி - அன்பில் மகேஷ் என மூன்று தலைமுறைகளாகவே இப்படி தொடருகிறது இந்த பந்தம்.

சிவா குடமுருட்டி சேகர்
இந்நிலையில் திருச்சி மாநகரை வலம் வந்தோம். நேரு மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த திருச்சி முழுவதும் நேருவின் மகன் அருண் நேரு பிறந்தநாள் என்பதால் ஊரெங்கும் ஒரே போஸ்டர் மயம். நாளிதழ்களில் முழுவதும் விளம்பரங்கள். இப்படி ஏக தடபுடல். ஆனால் அமைச்சரின் நெருங்கிய ஆதரவாளர்களாக அறியப்பட்ட சிலர் ஏற்கெனவே மன வருத்தத்தில் சற்றே விலகி இருக்கிறார்கள் என்பது வேறு கதை. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் திருச்சி சிவா, கே.என்.சேகரன், குடமுருட்டி சேகர், இனிகோ இருதயராஜ், கதிரவன், லால்குடி செளந்திரபாண்டியன் இப்படி லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இந்நிலையில் உதயநிதி அமைச்சராக்கப்பட்டால் வலது கையாக மகேஷ், இடது கையாக கதிரவன் மாறி விடுவார்கள். மத்திய மண்டலம் முழுவதும் அன்பில் மகேஷ் கைக்கு வந்து விடும். இந்த தேர்தல் தான் நேருவிற்கு கடைசி தேர்தலாகவும் இருக்கும் என்கிறார்கள் கட்சியில் இருக்கும் சீனியர் தொண்டர்கள். 

ராமஜெயம் வினோத்

அதற்காகத் தான் தன்னுடைய மகன் அருணை களத்தில் இறக்கி விட்டுள்ளார் நேரு என்கிறார்கள். ராமஜெயம் கொலைக்குப் பின் இந்த இழப்பு எனக்கு மிகப்பெரிய இழப்பு. இனி எக்காலத்திலும் எங்கள் குடும்பத்தினர் எவரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று சொன்ன நேரு, இப்பொழுது எதற்காக மகனை களமிறக்க வேண்டும் என கேள்வி கேட்கிறார்கள் அதே தொண்டர்கள். அத்தோடு ஆட்சியில் இருந்த பொழுது அனைத்துமாக இருந்த வினோத் என்னவானார் என்பதே தெரியவில்லை. அவர் கோலோச்சிய இடத்தை அருணால் இட்டு நிரப்ப முடியுமா என்பதும் மில்லியன் டாலர் கேள்வி. இது ஒருபுறம் இருக்க வினோத்தின் மாமனார் பி.ஜே.பியில் செல்வாக்கானவர். அவரின் பொறுமை திமுகவில் நேரு இருக்கும் வரை தான். அதன்பின் வினோத் பாஜகவிற்கு செல்லப் போகிறார் எனவும் கிசுகிசுக்கிறார்கள்.

நேற்று, டிசம்பர் 12ம் தேதி அருண் நேருவுக்கு பிறந்த நாள். ஆனால்  தன்னுடைய பிறந்த நாளில் திருச்சியிலேயே இல்லை. உதயநிதிக்கு பதவி வழங்கப்படும் விஷயம் முன்கூட்டியே அறிந்ததுடன் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு உதயநிதியை சந்தித்து வாழ்த்து பெற சென்னைக்கு சென்று விட்டாராம் அருண். உதய நிதியை காண வந்த அருண் நேருவை, கிட்டத்தட்ட 2 மணி நேரம் காக்க வைத்து தான் பார்க்க அனுமதி அளித்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். 

செளந்தரபாண்டியன்

ஏதாவது ஒரு விஷயம் அதிகமாக பேசு பொருள் ஆனால் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பார்க்கலாம் என்பார்கள். நாளை மீசை முளைக்கப் போகிறது. திருச்சி என்னவாகும் என காத்திருக்கிறார்கள் உடன்பிறப்புக்கள். இனி மேல் தான் திருச்சி அரசியல் களை கட்டும் என்கிறார்கள். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web