வீடியோ!! ஒரே குடும்பத்தில 72 பேர் !! கும்மாளமும், குதூகலமுமாய் அசத்தும் கூட்டுக்குடும்பம்!!

இந்தியாவை பொறுத்தவரை கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வரை கூட்டுக்குடும்பங்கள் தான் இருந்து வந்தன. தற்போது தனிக்குடும்பம் மாறி தனித்தனி குடும்பத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. இன்றைக்கு கூட்டுக்குடும்பமா எனக் கேட்டால் அப்படின்னா என்ன? எனக் கேட்கும் தலைமுறையாகிவிட்டது. பெண்ணின் திருமணத்தின் போது கூட்டுக்குடும்பத்தில் தான் வாழ வேண்டும். அனைவரையும் அனுசரித்து நடந்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை கூறுவர் அவளின் பெற்றோர்கள். இன்றைக்கு நிலைமை அப்படியே தலைகீழ். சிலர் தனியாக வாழ்கின்றனர். சிலர் சேர்ந்து வாழப் பிடிக்காமல் சிங்கிள் பேரண்ட்டாகி விட்டனர்.
குழந்தைகள் அவர்களின் உலகில் தனியாக வாழத் தொடங்கிவிட்டன. மேற்கத்திய கலாச்சாரம் பெருகி வரும் சூழலில் தாத்தா, பாட்டி,அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, அண்ணன், தம்பி என உறவுகளின் உன்னதம் தெரியாமலே வளர்கிறார்கள் ஆனால் இன்றும் தாத்தா, பாட்டி, பாட்டான், அத்தை, மாமா, அண்ணன், தம்பி, சித்தி, சித்தப்பா என ஒரே குடும்பமாய், ஒரே வீட்டில் ஒன்றல்ல இரண்டல்ல 72 பேருடன் சேர்ந்து வாழ்ந்து வரும் ஒரு குடும்பம் இருக்கிறது என்றால் பலரால் நம்பவே முடிவதில்லை. அவர்களுக்கான வாழ்க்கை சுவாரஸ்யங்கள்.
மகாராஷ்டிராவில் சோலாப்பூர் பகுதியில் தலை தலைமுறையாக அஷ்வின் தோய் ஜோடா குடும்பம் ஒரே இடத்தில் ஒரே குடும்பமாக வாழ்கிறது. இவரின் மகன், மகள், பேத்தி, பேரன் என அடுத்த தலைமுறை எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. தனிமைன்னா என்னன்னே எங்களுக்கு தெரியாது. கூட்டுக்குடும்பம் தான் எங்களின் உயிர் மூச்சாக மாறிவிட்டது என்கின்றனர் இக்குடும்ப உறுப்பினர்கள்.
72 members living under one roof. Yes, you read that right! The Doijode family pic.twitter.com/9FoULz0XFR
— krish💙 (@Iwillsayitall) November 15, 2022
இக்குடும்பத்தில் அனைவருக்கும் காலை மற்றும் மாலை என டீ போட தினமும் 20 லிட்டர் பாலும், 15 கிலோ வரை காய்கறிகளும் வாங்குகின்றனர். தினசரி செலவு ரூ1000 முதல் ரூ1200 வரை . அசைவ உணவு எனில் 5000 வரை ஆகலாம் என்கின்றனர். ஒரு ஆண்டிற்கு தேவைப்படும் அரிசி, கோதுமை, பருப்பு என 40 முதல் 50 மூட்டைகள் வரை வாங்கி விடுவர்.
தொடக்கத்தில் கூட்டுக்குடும்பத்தில் வாழ்வது எங்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது .ஆனால் இப்போது இதை விட்டுச் செல்ல முடியாது என்கின்றனர். குறிப்பாக விளையாடுவதற்கும், குழந்தைகளை ஆரோக்கியமாக விட்டுக்கொடுத்து நல்ல முறையில் வளர்ப்பதற்கும் வசதியாக உள்ளது என பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!