வீடியோ!! நடிகையிடம் மேடையில் தகாத முறையில் நடந்து கொண்ட கல்லூரி மாணவர்!!

 
அபர்ணா பாலமுரளி

தமிழில்  சூரரைப் போற்று திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் இதயம் கவர்ந்த அபர்ணா முரளி மலையாளம், தமிழகம் என மாறி , மாறி நடித்து வருகிறார். இவர் 8 தோட்டாக்கள் படம் மூலம் அறிமுகமான போதிலும் சூர்யாவுடன் இணைந்த சூரரை போற்று படம் தான் பெரும் வரவேற்பை பெற்றது. பாராட்டுக்கள், வாழ்த்துக்களுடன்  சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.  அதன் பிறகு  வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அபர்ணா.


அந்த வகையில் தற்போது தங்கம் என்கிற மலையாள படத்தில் நடித்து ஜனவரி 26ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் வினீத் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி. இப்படத்தின் புரமோஷனுக்காக கேரளா சட்டக்கல்லூரி ஒன்றில் படக்குழு  கலந்துகொண்டது. அந்த விழா மேடையில் நடிகை அபர்ணா பாலமுரளி அமர்ந்திருந்தபோது சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் மேடையேறி வந்து அபர்ணாவிற்கு பூங்கொத்து கொடுத்து கைகுலுக்கினார்.  

சூரரை போற்று

அபர்ணாவுடன்  போட்டோ எடுப்பதற்காக  அந்த மாணவர் அபர்ணாவின் தோள்மீது கையை போட்டார். இதனை  கொஞ்சமும் விரும்பாத அபர்ணா, அவரின் பிடியில் இருந்து நழுவி மீண்டும் தனது இருக்கையில் சென்று அமர்ந்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  அதன்பிறகு அதே மாணவர் மீண்டும் மேடை ஏறி வந்து போட்டோ எடுப்பதற்காகத் தான் கை போட்டேன். தவறான எண்ணம் எதுவும் இல்லை என கூறினார். 2வது முறை கைகொடுக்க மறுத்துவிட்டார் அபர்ணா பாலமுரளி. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web