வீடியோ!! நடுவானில் மோதிக்கொண்ட 2 ஹெலிகாப்டர்கள்!! 4 பேர் பலி!! 3 பேர் கவலைக்கிடம்!!

 
heli

ஆஸ்திரேலியாவின் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற சீவேல்டு தீம்பார்க். இந்த தீம் பார்க் ஆஸ்திரேலியே குயின்ஸ்லாந்து மாகாணம் ஹரி ஒரில் நகரில் உள்ள கடற்கரை அருகே  அமைந்துள்ள கேளிக்கை பூங்கா.  இந்த தீம்பார்க்கிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம்.


நேற்று வரை அனைத்து நாடுகளிலும் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டதால் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.  பூங்கா நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளின் வசதிக்கு ஏற்ப ஹெலிகாப்டர்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேளிக்கை பூங்கா அருகே உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து இன்று  பிற்பகலில் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது.

ஹெலிகாப்டர்

அதேநேரத்தில் மற்றொரு ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக கீழே இறங்கியது. எதிர்பாராத விதமாக நடுவானில் 2 ஹெலிகாப்டர்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தனர். மேலும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு குழு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. விபத்துக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web