வீடியோ!! நயனுக்கு ‘ஐ லவ் யூ’ சொன்ன ரசிகர்கள் கூட்டம்!! கடுப்பில் விக்னேஷ் சிவன்!!

 
கனெக்ட்

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. இவரது அடுத்த படமாக ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில்  ‘கனெக்ட்’ திரைப்படம் நாளை மறுநாள்  டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாகவுள்ளது.இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள  இந்த திரைப்படம் ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் களம் இறங்குகிறது.  

நயன்

இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றது. இந்த சிறப்பு காட்சிகளுக்கு  கணவர் விக்னேஷ் சிவனுடன் வந்த நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் உற்சாகமாக உரையாடினார். அவர்களுடன் ஸ்ருதிகா, பவித்ரா உட்பட பல திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டனர்.நயன்தாரா வரும் தகவல் வெளியானதுமே திரையரங்கில் கூட்டம் கூடத் தொடங்கியது.  


நயன்தாரா திரையரங்கிற்குள் செல்லும் போது ரசிகர்கள் பலர் நயன்தாராவை பார்த்து ஹாய் சொல்லினர். சிலர் மேடம்…. “ஐ லவ் யூ” என கத்தினார்கள். ரசிகர்களின் அன்பை புரிந்துகொண்ட, நயன்தாராவும் “லவ் யூ” எனக் கூவினார். இந்த வீடியோக்களும், புகைப்படங்களும், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . ‘கனெக்ட்’ திரைப்படத்தை தொடர்ந்து ஷாருக்கனுக்கு ஜோடியாக ஜவான் படத்திலும்  நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web