வீடியோ!! தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே!! தந்தையின் வலக்கரமாக மாறிய மகள்!!

 
ஷோபனா


தாயின் அன்புக்கு சிறிதும் குறைந்ததில்லை தந்தையின் அன்பு என்பதை இன்றைய தந்தைகள் வாழ்ந்து காட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்பிள்ளைகளிடம் கூடுதல் அன்பும், அக்கறையும் வைத்து வளர்த்து வருகின்றனர். அதே நேரத்தில் பெண் பிள்ளைகளும் தகப்பனிடத்தில் கூடுதல் பிரியத்தை செலுத்துகின்றன. அப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவம் பெரம்பலூரில் நடைபெற்றுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி கிராமத்தில் வசித்து வருபவர்  சங்கர். இவர்  எலக்ட்ரீசியனாக  பணிபுரிந்து வருகிறார். வேலைக்கு சென்றால் தான் பணம் . அன்றாடம் பணி செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் தான் குடும்பத்தை ஓட்டி வருகிறார். இவருடைய மகள் 12 வது படிக்கும் ஷோபனா பெரம்பலூரில் உள்ள தோம்னிக் பள்ளியில் படித்து வருகிறார். இவர் தான் தினமும் ஷோபனாவை வீட்டிலிருந்து  பள்ளிக்குத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வார். 



இந்நிலையில் பணிக்குச் சென்ற இடத்தில் சங்கரின் வலது கையில் திடீர் காயம் ஏற்பட்டு விட்டது.  கையில் பெரிய காயம் ஏற்பட்டதால்,  வண்டி ஓட்ட முடியாது. இருசக்கர வாகனத்தில் தான்  ஷோபனா பள்ளி செல்ல முடியும் என்பதால் 'பரவாயில்லை அப்பா. உங்களுக்குச் சரி ஆகட்டும் நான் அப்புறம் பள்ளிக்குப் போகிறேன்' என மகள் கூறினார். தேர்வு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில்  மகள்  படிப்பைத் தவறவிடக்கூடாது என நினைத்த சங்கர், பைக்கில் அழைத்துச் செல்ல முயற்சி செய்தார்.  ஆனால் அவரால் ஒரு கையில் பைக்கை ஓட்ட முடியவில்லை. அப்போது தான், ஷோபனா 'அப்பா நீங்க, இடது புறம் ஸ்டீயரிங்கை பிடித்துக் கொள்ளுங்கள், நான் வலதுபுற ஸ்டீயரிங்கை பிடித்துக்கொள்கிறேன். இருவரும் போகலாம் என யோசனை தெரிவித்தார்.

அதன்படி தனது கிராமத்திலிருந்து 3 கி.மீ., தூரத்திற்குத் தனது மகள் உதவியுடன் பைக்கை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு கொண்டுவிடும் சங்கர் பள்ளி முடியும் வரை அங்கேயே காத்திருந்து மகளை திரும்ப அழைத்து வருகிரார்.  முறைப்படி பார்த்தால், இது ஒரு விதிமீறல் தான். ஆனால் தன் பெண் குழந்தையின் கல்வி மீது ஒரு தந்தை வைத்திருக்கும் அக்கறை. ஒரு பெண் குழந்தை, தன் தந்தை மீது வைத்திருக்கும் பாசம். உண்மையில் இதைப் பார்க்கும் போது, நெகிழ்ச்சியில் கண்கள் குளமாவதை தவிர்க்க முடியவில்லை. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web